News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தவெக அரசை கலைக்க 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா கூறியபோது பலரும் அது பொய் என்று குற்றம் சுமத்தினார்கள். ஆனால், இன்று மதுரை மாநகராட்சி அதிமுக முன்னாள் துணை மேயர் பி.எ..மன்னன் பேரம் பேசியதற்கான ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆதாரங்களுடன் எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை  போலீசார் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகின்றன.

சமீபத்தில் முஸ்தபா, ‘’த.வெ.க ஆட்சிய கவிழ்க்க மீண்டும் தி.மு.க – அ.தி.மு.க குதிரை பேரத்தில் ஈடுபடுறாங்க.. எனக்கே 15 கோடி தரோம்னு மதுரைல இருக்க அ.தி.மு.கவ சேர்ந்தவரு ஃபோன் பண்ணாரு.. சீக்கிரமா அவர் யாருனு சொல்றேன்.. 15 கோடி இல்ல 100 கோடி கொடுத்தாலும் முதலமைச்சர் விஜய்யை விட்டு நாங்க வர மாட்டோம்’’ என்று பேட்டியளித்தார். அதன்படி இன்று மன்னன் மீது புகார் கொடுத்துள்ளார்.

இப்படி பேரம் பேசி ஆட்களை வலைவீசி பிடித்தாலும் ஆட்சியைக் கலைக்க முடியாது என்பதே உண்மை. ஏனென்றால், 2026 தேர்தலில் 108 இடங்களில் வென்ற ஆளும் தமிழக வெற்றிக் கழகம், தற்போது இரண்டு இடைத்தேர்தல் வெற்றிகளுக்கு பின் 109 இடங்களுடன் வலுவாக உள்ளது.

இதுதவிர காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி* உள்ளிட்ட தோழமை கட்சிகள் முழு ஆதரவுடன் உள்ளன. எனவே ஆளும் தரப்பின் பலம் 115-ஐ தாண்டியே உள்ளது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அது தோல்வியில் தான் முடியும்.

ஆட்சியை நேரடியாக கவிழ்க்க முடியாது என்பதால், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து ஆளும் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுகிறார்கள். அதாவது நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது வெளிநடப்பு செய்ய வேண்டும், அல்லது எதிராக வாக்களிக்க வேண்டும், அதற்கு பதிலாக இடைத்தேர்தலில் சீட், பெரிய தொகை என ஆசை காட்டி பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 115 என்ற மேஜிக் நம்பரை குறைத்து, ஆட்சியை கவிழ்க்கலாம் என்பது தான் எதிர்க்கட்சிகளின் கணக்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆளும் தரப்பு எம்.எல்.ஏக்கள் 109 பேரும் முதல்வர் விஜய் தலைமையில் உறுதியாக உள்ளனர். யாரும் உடைந்து போக தயாராக இல்லை. ஆளும் தரப்பு உஷாராகி அனைத்து எம்.எல்.ஏக்களையும் ஒருங்கிணைத்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே எம்.எல்.ஏக்களை விலை பேசி ஆட்சியை கவிழ்ப்பது சாத்தியமே இல்லை. விஜய் நாளுக்கு நாள் ஸ்ட்ராங் ஆகிவருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link