கனமழையில் விறுவிறு நடவடிக்கை. விடியவிடிய விஜய் அப்டேட்

சென்னையில் நேற்று இரவு மேகவெடிப்பு காரணமாக பெரும் கனமழை பெய்துள்ளது.. பாரிமுனையில் 35.8 செ.மீ., திருவொற்றியூரில் 32.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு நடவடிக்கை குறித்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முதல்வர் விஜய் அப்டேட் கேட்டறிந்து, நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதால், சென்னை காலையிலே இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. நேற்று சென்னையில் அதிகபட்சமாக மழை பெய்த நிலையில், சென்னையில் உள்ள முக்கிய சுரங்கபாதைகள் எல்லாம் வழக்கமான நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் மழைநீர் […]
25 ஆயிரம் டன் அரிசி கிலோ 30 ரூபாய். விஜய் அவசர நடவடிக்கை

அரிசி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை எக்கச்சக்கமாக அதிகரித்துவிட்டது என்று ஒரு குற்றச்சாட்டு நிலவும் நிலையில், மக்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் அதிரடி நடவடிக்கைக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் .வ.காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுகுறித்து அமைச்சர் […]
இந்த ஆண்டு விஜய் ஹேப்பி தீபாவளி..? தயாராகும் பம்பர் பரிசு

வரும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் விஜய் சூப்பர் டிரீட் கொடுக்கப்போவதாக செய்திகள் வெளியகின்றன. ரேஷன் கடைகள் மூலம் இலவச தீபாவளி மளிகைப் பொருட்கள் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட 21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டுறவுத் துறை அமைச்சர் […]
தேவாவுக்கு விஜய் நேரில் அஞ்சலி. உடலுக்கு அரசு மரியாதை.

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் தேவா இன்று காலை மரணம் அடைந்தார். அவர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர் விஜய். அப்போது, துக்கம் தாளாமல் கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவாவிற்கு முதல்வர் ஜோசப் விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். அவரது மறைவுக்கு விஜய் கொடுத்திருக்கும் அஞ்சலி குறிப்பில், ‘’தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பு, கானா பாடல்களால் மக்களைக் கவர்ந்தவருமான தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த […]
தொட்டவனை விட மாட்டேன். போதை நிர்வாகி மீது விஜய் உடனடி ஆக்ஷன்

நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த விவகாரம் வெளியானதுமே, அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரக திருச்சி பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை 6 மணியளவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி […]
கோவையில் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு… பெரியார் அறிவுலகம் திறப்புவிழா

கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோவில் வருகை தந்த விஜய்க்கு மேள தாளங்களுடன், பூக்களை தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் வரவேற்பு அளித்தனர். கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. பெரியார் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் […]
காமராஜருக்கு விஜய் ஸ்பெஷல் மரியாதை… அட்டகாச அரசாணை

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் அனைத்து முக்கிய கோவில்களிலும் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “பள்ளிக்குழந்தைகளின் பசிப்பிணி போக்கிய காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் முக்கிய திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த அறநிலையத்துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தை ஏற்று, அரசு செயலாளர் ஜே.ராஜாராமன் அரசாணை […]
விஜய் உருட்டிய அன்னாசிப்பழம். ஏழைகளுக்குப் பட்டா, மாணவிகளுக்கு நாப்கின்

ஒவ்வொரு நாளும் முதல்வர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எக்கச்சக்க திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று மற்றும் ஏகப்பட்ட திட்டங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் விஜய் அவர்களும் சிங்கப்பூர் குடியரசின் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான கான் கிம் யோங் அவர்களும் சென்னை, அம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் சென்னை 01-ஐ (இணைந்து சிங்கப்பூர் நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி அன்னாசிப் பழத்தை உருட்டிவிட்டு புதிய தரவு மையத்தைத் திறந்து […]
கிலோ 30 ரூபாய்க்கு அரிசி விற்பனை… விலைவாசிக்கு விஜய் ஆக்ஷன்

தமிழ்நாட்டில் மட்டும் விலைவாசி உயர்ந்திருப்பது போன்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். அரிசி வரத்து குறைந்திருப்பதும், அரிசியை எதிர்க்கட்சி வியாபாரிகள் பதுக்கி வைத்து விலையேற்றத்தை உருவாக்குவதாகவும் உணவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டினார். அதேநேரம், சாதாரண பொதுமக்களுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அரிசியை 30 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. விஜய்யின் இந்த நடவடிக்கை மக்களை குஷிப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தவெகவின் ஐ.டி. விங், ‘’அவசர அவசரமாக விலைவாசி உயர்வு பற்றி அரைவேக்காட்டுப் பதிவு […]
பல்டி மேல் பல்டி. அவமானமா இல்லையா திருமா..?

திமுக கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி என்று பேசிய திருமாவளவன், பதவி கிடைக்கிறது என்றதும் கொள்கையைத் தூக்கிப் போட்டுவிட்டு தவெகவுக்கு வந்துவிட்டார். இங்கே பாமக நுழைவதற்கு வாய்ப்பு இருப்பது தெரியவந்ததும் தினம் ஒரு பேச்சு பேசுகிறார். எனவே, அவரை பல்டிவளவன் என்று எல்லோரும் இப்போது அழைக்கத் தொடங்கிவிட்டனர். விஜய்க்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் படி பேசி வரும் திருமாவளவன் பத்திரிகையில் முன்பு பேசியதையும் இப்போது பேசியதையும் எடுத்துப் போட்டுள்ளனர். பல்டி பேச்சு 1. அப்போ : […]

