சென்னை மக்களுக்கு விஜய் ஹேப்பி செய்தி. குடிநீருக்கு புத்தம் புது திட்டம்.

சென்னை மக்களின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில், ₹3,108 கோடி மதிப்பிலான ரிங் மெயின் திட்டத்திற்கு நாளை முதல்வர் விஜய் அடிக்கல் நாட்ட இருப்பது பரபரப்பாகியுள்ளது. சென்னை மாநகர மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ₹3,108 கோடி மதிப்பிலான மெகா குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை அடிக்கல் நாட்டுகிறார் என்பது தெரியவந்துள்ளது. இதுவரை சென்னைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேரடி குழாய் மூலம் […]
ஆந்திரா மீட்டிங் சக்சஸ்… விஜய் டபுள் சிக்ஸர்

ஆந்திராவுக்கு இப்போது தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்குவோம் என்று முதல்வர் விஜய்யிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்திருப்பது மெகா சக்சஸ் நடவடிக்கையாக பாராட்டப்படுகிறது. நேற்றைய தினம், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசிக்க விஜயவாடாவிலுள்ள ஆந்திர முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு இல்லத்திற்குச் சென்றார் தமிழக முதல்வர் விஜய். அதன்பிறகு கனகதுர்கா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இதையடுத்து ஆந்திர […]
கூடுதல் விலையில் மின்சாரக் கொள்முதல்..? அமைச்சர் தெளிவான விளக்கம்

மின்சாரக் கொள்முதலில் தவெக ஊழல் என்று அத்தனை கட்சிகளும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அக்டோபர் 31 வரை மட்டுமே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார். யூனிட் ஒன்றுக்கு 35 ரூபாய் என அதிக விலைக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்டதில் மிகப் பெரிய மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை’ தொடங்கிவிட்டது’’ என அதிமுக பொதுச்செயலாளர் […]
புதிய ஆளுநருக்கு விஜய் வாழ்த்து… திமுக மாஜிக்களுக்கு ஆபத்து

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள .ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதல்வர் விஜய் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் என்றும் கூறியிருக்கிறார். முழு நேர ஆளுநர் நியமனத்திற்குப் பிறகு தமிழக அரசியல் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 12 அன்று வெளியிட்ட அறிவிப்பின் மூலம், தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பைத் கூடுதலாகக் கவனித்து வந்த […]
விஜய்க்கு ஆந்திராவில் செம வரவேற்பு…? நதி இணைப்புக்கு முன்னெடுப்பு

தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் இன்று ஆந்திரா பயணம் செய்கிறார். விஜய்க்கு செமையான வரவேற்பு காத்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஆந்திரா இதுவரை வழங்கவேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. அதோடு கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து விவாதிக்கவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் தமிழ்நாடு முதல்வர் விஜய். இந்த நதி இணைப்பு திட்டத்தை மட்டும் முதல்வர் விஜய் செயல்படுத்திவிட்டால், வரலாற்றில் இன்னொரு பெரிய இடத்தை […]
ஆறு பேர் ராஜினாமா அட்டகாசத் தீர்ப்பு. விஜய் கட்சிக்குத் தாவும் எம்.எல்.ஏக்கள்

ஆறு எம்எல்ஏக்கள் ராஜினாமா சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது, விஜய் அரசுக்கு மிகப்பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது. அடுத்து இடைத்தேர்தல் நடக்கவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிராகத் தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தது. […]
விஜய்யை நெருங்கும் அன்புமணி. அமைச்சர் பதவி துறக்குமா விசிக..?

விஜய்க்கு எதிராக வாய்க்கொழுப்பாகப் பேசிவரும் திருமாவளவனுக்கு செக் வைப்பது போது அன்புமணியுடன் தவெக நெருக்கம் காட்டிவருகிறது. இதையடுத்து, தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியேறும் என்று அமைச்சர் வன்னி அரசு அறிவித்திருப்பது கடும் சர்ச்சையாகியுள்ளது. நேற்றைய தினம் திண்டிவனத்தில் விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் வன்னி அரசு, ‘’பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்குமா? என்று பலர் கேட்கின்றனர். இதற்கு பலமுறை பதில் அளித்து […]
விஜய் கட்சிக்கு எம்.எல்.ஏ. எண்ணிக்கை ஸ்ட்ராங்க்… அடுத்த தேர்தல்..?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் இன்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து விஜய் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 109 என்று அதிகரித்துள்ளது. நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் என்பது தவெக அரசின் 4 மாத கால ஆட்சிக்கான மார்க் ஷீட் என்று கருதப்பட்ட காரணத்தால், தவெக இந்த தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொண்டது. முதலமைச்சர் விஜயும் கிராமம் […]
பிரதமரை வழியனுப்பிய விஜய்… அட்டகாச அரசியல் மாற்றம்.

பிரதமரை வரவேற்பது வழக்கமாக முதல்வர்களின் பணி. ஆனால், விமானநிலையத்தில் காத்திருந்து பிரதமர் மோடியை வழியனுப்பிய விவகாரத்தில் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய். இதனை பாஜகவினர், ‘’நாட்டின் பிரதமரை வரவேற்று, வழியனுப்பி வைப்பது மிகப்பெரிய மாண்பு. நமது பிரதமரை நாம் மதித்தால்தான் உலக நாடுகள் நம்மை மதிக்கும். தங்களின் இந்தச் சிறந்த பண்பு பொது நிர்வாகத்தில் என்றும் நிலைத்திருக்க மனமார்ந்த வாழ்த்துகள்’’ என்று பாராட்டி வருகிறார்கள். பிரதமரை வழியனுப்புவதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்து […]
நேரு மாமாவுக்கு அடுத்து விஜய்… நான்கு வகை கேக் மாஸ் அறிவிப்பு

இன்று பெண் குழந்தைகள் நாளையொட்டி வாழ்த்து தெரிவித்திருக்கும் முதல்வர் விஜய், குழந்தைகள் தினவிழாவையொட்டி கேக் வழங்கிக் கொடுக்க உத்தரவு போட்டிருக்கிறார். இன்றைய தினம் விஜய், ‘’பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! […]

