News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஒவ்வொரு நாளும் முதல்வர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எக்கச்சக்க திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று மற்றும் ஏகப்பட்ட திட்டங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய் அவர்களும் சிங்கப்பூர் குடியரசின் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான கான் கிம் யோங் அவர்களும் சென்னை, அம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் சென்னை 01-ஐ (இணைந்து சிங்கப்பூர் நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி அன்னாசிப் பழத்தை உருட்டிவிட்டு புதிய தரவு மையத்தைத் திறந்து வைத்தனர்.

அடுத்தப்படியாக பெருநகர சென்னை மாநகராட்சி, பேசின் பாலம் பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாயானது பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து வியாசர்பாடியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் மிதவை தூர்வாரும் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டார்.

அதோடு ஏழை, எளிய மக்களுக்காக மிக மிக முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 250 சதுர அடிக்கு மிகாமல் இருக்கக்கூடிய வீடுகளுக்கு நீர்நிலை மற்றும் மேய்ச்சல் புறம்போக்கை தாண்டி வேறு சில புறம்போக்கில் இருந்தால் அவர்களுக்கு பட்டா இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படும். இதனால் லட்சக்கணக்கான பயனடைவார்கள்.

அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக மக்கும் தன்மையுடைய சானிட்டரி நாப்கின்கள் வழங்க வெண்டிங் மெஷின்கள் அமைக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதோடு, நேற்றைய தினம் புதிய கவர்னரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஒரே நாளில் எத்தனை மாற்றங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link