Share via:
திமுக கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி என்று பேசிய திருமாவளவன்,
பதவி கிடைக்கிறது என்றதும் கொள்கையைத் தூக்கிப் போட்டுவிட்டு தவெகவுக்கு வந்துவிட்டார்.
இங்கே பாமக நுழைவதற்கு வாய்ப்பு இருப்பது தெரியவந்ததும் தினம் ஒரு பேச்சு பேசுகிறார்.
எனவே, அவரை பல்டிவளவன் என்று எல்லோரும் இப்போது அழைக்கத் தொடங்கிவிட்டனர். விஜய்க்கு
தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் படி பேசி வரும் திருமாவளவன் பத்திரிகையில் முன்பு பேசியதையும்
இப்போது பேசியதையும் எடுத்துப் போட்டுள்ளனர்.
பல்டி பேச்சு 1.
அப்போ : (த.வெ.க-வின் விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு…)
தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல், ‘ஆட்சியில் பங்கு தருகிறோம்’ என ஆஃபர் கொடுத்து
விஜய் காத்திருக்கிறார்.
இப்போ : தேர்தலுக்கு முன்பே, ‘ஆட்சியில் பங்கும்… அதிகாரத்திலும்
பங்கு’ என்று சொன்ன ஒரே தலைவர் தமிழ்நாட்டில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் அவர்கள்தான்.
பல்டி பேச்சு 2.
அப்போ: (திருச்சியில் 2, அக்டோபர் 2025) விஜய் மீது வழக்கு
பதிவுசெய்ய காவல்துறை தயங்குவது ஏன்? (செப்டம்பர் 11, 2026 தர்மபுரியில் நடந்த திருமண
நிகழ்வில்…) கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு தொடுத்திருக்க வேண்டும் என்று நான்
சொன்னேனா இல்லையா, வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அதனால்தான் கும்பல் கூடியது, நெரிசல்
ஏற்பட்டது. நெரிசல்தான் சாவுக்களுக்கு காரணம் என்கிறபோது அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய
அத்தனை பேரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டுமா, வேண்டாமா… அப்போதே விஜய்யை அம்பலப்படுத்தியிருக்க
வேண்டுமா, வேண்டாமா?
இப்போ : (அக்டோபர் 1, மதுராந்தகம் கூட்டணிக் கட்சிகள் பொதுக்கூட்டத்தில்)
கரூர் சம்பவம் நடந்தபோது ஆதவ் அர்ஜுனாவைத் தொடர்பு கொண்டு, ‘வருத்தப்பட வேண்டாம். மனம்
தளர வேண்டாம். இது ஒரு விபத்து, அவ்வளவுதான். இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம்.
இதைக் கடந்து செல்லுங்கள். விஜய்யிடம் என்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துங்கள்’ எனக்
கூறினேன்.
பல்டி பேச்சு 3.
அப்போ : (அக்டோபர் 9, 2025 திருவண்ணாமமலை மாவட்டம் செங்கம்
நிகழ்ச்சியில்…) பா.ஜ.க எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக
இல்லை. இப்போ : சினிமாவில் விஜய், அரசியலில் ஜோசப் விஜய். பா.ஜ.க-வுக்கு எதிரான ஒரு
நிலைப்பாட்டைத் தன் பெயரை அறிவிப்பதிலிருந்தே அவர் எடுக்கிறார். அந்தப் பெயரிலேயே தேர்தல்
களம் காண்பேன் என்னும் துணிச்சலான முடிவை அவரால் எடுக்க முடிந்தது.
பல்டி பேச்சு 4.
அப்போ : (விக்கிரவாண்டியில் 2024-ல் நடந்த த.வெ.க-வின்
முதல் மாநாடு குறித்து…) மாநாட்டில் ஆக்கபூர்வமான எந்த செயல் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
தி.மு.க வெறுப்பு, தி.மு.க வெறுப்பு, தி.மு.க வெறுப்பு என்பதே த.வெ.க உமிழ்ந்த அரசியல்.
இப்போ : தேர்தலுக்கு முன்பாக தி.மு.க-வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் விஜய். வேறு
கட்சிகளைப் பேசவில்லை. அது ஒரு Strategy.
பல்டி பேச்சு 5.
அப்போ: (மார்ச் 8, 2025 சென்னையில் மகளிர் தின விழாவில்…)
இன்னும் ஒரு தேர்தல் கூட்டணி நிச்சயமாகவில்லை. எவ்வளவு வாக்குகள் பெறுவார்கள் என்று
யாருக்கும் தெரியாது. ஆனால், முதலமைச்சரே இவர்தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு,
வலிந்து வலிந்து செய்தியைப் பிரசுரித்துப்படுத்துகிறார்கள். இப்போ : த.வெ.க-வை
நாங்கள் குறைத்து மதிப்பிட்டோம் என்பதைவிட குறுகிய யுத்தியோடு அணுகினோம் என்பதுதான்
உண்மை.
பல்டி பேச்சு 6.
அப்போ : (செப்டம்பர் 11, 2026 தர்மபுரியில் நடந்த திருமண
நிகழ்வில்…) 100 சதவீகிதம் தி.மு.க கூட்டணியில் வி.சி.க நீடிக்க முடியாமல் போனதற்கு
தி.மு.க-தான் முழுப்பொறுப்பு.
இப்போ : த.வெ.க-வுடன் இணைந்து இந்தக் கூட்டணியில் பயணிக்கக்கூடிய
சூழல் உருவானதற்கு, ‘காலம் இட்ட கட்டளை’தான் காரணம். திருமாவிற்கு வாக்களியுங்கள் வாக்களியுங்கள்,
என்று சிதம்பரத்தில் எத்தனை பேருக்கு, கைகூப்பி வணக்கம் வைத்து வாக்கு கேட்டு இருக்கேன்…..
அவமானமாய் இருக்கு!
அடேங்கப்பா, இத்தனை பல்டி உடம்புக்கு ஆகாது திருமா

