Share via:
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர்
காமராஜரின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் அனைத்து முக்கிய கோவில்களிலும் சிறப்பு பூஜை,
அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “பள்ளிக்குழந்தைகளின்
பசிப்பிணி போக்கிய காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் முக்கிய திருக்கோவில்களில்
சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை
செயல்படுத்த அறநிலையத்துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தை ஏற்று, அரசு செயலாளர் ஜே.ராஜாராமன்
அரசாணை பிறப்பித்துள்ளார்.
அரசாணையில் 4 விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூலை 15-க்கு முன்பே, அதாவது முன்னிட்ட நாளிலேயே
விழாவை நடத்த வேண்டும். அது திருக்கோவிலின் வசதிக்கேற்ப இருக்கலாம்.
அன்னதானத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் அனைத்தும் 100% சைவமாகவும்,
முழு சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். இதை செயல் அலுவலர்களே உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக தனியாக நிதி கேட்கக்கூடாது. ஏற்கனவே உள்ள வரவு-செலவு திட்டத்திலேயே,
எளிமையான முறையில், ஆடம்பரம் இல்லாமல் நடத்த வேண்டும்.
தீவிர கண்காணிப்பு: மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் தங்கள்
கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த விழா சிறப்பாக நடக்கிறதா என நேரடியாக களத்தில்
இறங்கி கண்காணிக்க வேண்டும்.
ஏழைகளின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜருக்கு, கோவில்களில்
மரியாதை செய்வது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியினர்
கொடுக்காத மரியாதையை விஜய் கொடுக்கிறார்.

