ஆதித்யா எல்-1 விண்கலம்: புவிசுற்று வட்டப்பாதை உயரம் 4வது முறையாக அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது முதல் தற்போது 4வது முறையாக புவி சுற்வட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் தேதி பி.எஸ்.எல்.சி. சி-57 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 3 நிமிடத்திலேயே ஆதித்யா எல்&1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. அதன் பின்னர் புவிவட்டப் பாதையில் தனது பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலத்தின் உயரத்தை படிப்படியாக […]
வேறு நீதிபதிக்கு மாற்ற முடியாது! பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்து உத்தரவிட்டார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மறுவிசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை கடந்த 7ம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. […]
சுரங்கத்தில் கிடைத்த வேற்றுகிரகவாசிகளின் மம்மி உடல்கள்! ஆச்சரியமான புகைப்படங்கள்!

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேற்று கிரகவாசிகளின் மம்மி உடல்களை பெருவில் ஆராய்ச்சியாளர்கள் சுரங்கத்தில் இருந்து கண்டெடுத்த சம்பவம் உலக ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வேற்றுகிரகவாசிகள், பறக்கும் தட்டு குறித்த விஞ்ஞான ஆராய்ச்சிகளும், வாதங்களும் இன்றளவும் கூட மக்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் எனலாம். இந்த பிரபஞ்சத்தில் உண்மையாகவே வேற்று கிரகவாசிகள் உள்ளனரா? அவர்கள் அடிக்கடி நமது பூமியில் பறக்கும் தட்டுகள் மூலம் வந்து செல்கின்றனரா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகளுக்கும் சரியான விடை இன்னும் […]
மலேசியாவை அதிர வைத்த ‘ஜெயிலர்’ வசூல் சாதனை!

உலகளவில் வசூல் சாதனை புரிந்து வரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது மலேசியாவில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக மலேசியாவில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்ட ஐங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு அடுத்த மைல் கல் என்றே சொல்ல வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ஓடிடி யில் வெளியான பின்னரும் இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. […]
மேம்படுத்தப்பட்ட ஐபோன்-15 இன்று அறிமுகம்! விலை கூட இவ்வளவுதான்

ஐபோன்கள் என்றால் அடுத்தடுத்த அறிமுகங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கத்தான் செய்கிறது. உடனே இணையத்தை அலசி ஆராய்ந்து தாங்கள் எதிர்பார்க்கும் பீச்சர்ஸ்கள் இருக்கிறதா என்று கண்டுபிடித்து வாங்கி விடுகிறார்கள் வாடிக்கையாளர்கள். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இன்று ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் அறிமுக விழா இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை இணையவாசிகள் இணையத்தில் கண்டு பயன்பெறலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபோன் […]
இந்திய அணியிடம் 128 ரன்களுக்கு சுருண்டு விழுந்த பாகிஸ்தான் அணி!

ஆசியக் கோப்பை சூப்ப்ர4 போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய சாதனை புரிந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள். அதிலும் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிகளைப் பற்றி சொல்லவா வேண்டும். எப்போது போட்டி தொடங்கும் என்றும் டிவி முன்பு குடும்பம் குடும்பமாக காத்துக் கொண்டிருக்கும் வழக்கம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளையும் […]
வீராங்கனைக்கு உதட்டில் முத்தம்! ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் ராஜினாமா?

வீராங்கனையின் உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம் தொடர்பாக ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் 9வது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்தை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. உலகக்கோப்பை சாம்பியன் படத்தை வென்ற ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. அதற்காக போடப்பட்ட மேடையில் ஸ்பெயின் நாட்டு […]
குவியல் குவியலாய் சடலங்கள்! 2000&ஐ தாண்டிய மொராக்கோ பலி எண்ணிக்கை!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுதான் மொராக்கோ. இங்கு கடந்த 8ம் தேதி (செப்.) இரவு 11.11 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 6.8 என்று பதிவான அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கி சீட்டுக்கட்டுகளை போல […]
அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 18வது ஜி20 மாநாடு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த பெருமை தற்போது இந்தியாவுக்கு சொந்தமாகியுள்ளது. யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு ஜி20 மாநாட்டிற்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதால் ஜி20 மாநாடு இனிதே நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்து பலரின் பாராட்டையும் பெற்றது. மாநாட்டின் […]
அடுத்த ஜி20 மாநாட்டின் பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு!

18வது ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி முடித்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான மாநாட்டின் பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 18வது ஜி20 மாநாட்டு கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சர்வதேச தலைவர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் ஏற்பாடுகளை கண்டு வியப்படைந்தனர். ‘‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’’ என்ற கோட்பாட்டின் கீழ் நடத்தப்பட்ட ஜி20 மாநாடு சர்வதேச அளவில் இந்தியா மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. இம்மாநாட்டில் […]

