News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வீராங்கனையின் உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம் தொடர்பாக ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 9வது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்தை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

உலகக்கோப்பை சாம்பியன் படத்தை வென்ற ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. அதற்காக போடப்பட்ட மேடையில் ஸ்பெயின் நாட்டு வீராங்கனைகளுடன், ஸ்பெயின் நாட்டு கால்பந்து சம்மளேன தலைவர் லூயிஸ் ருபியாலெசும் நின்று கொண்டிருந்தார்.

விழா மேடையில் லூயிஸ் ருபியாலெஸ், திடீரென்று ஸ்பெயின் வீராங்கனையான ஜெனிபர் ஹெர்மோசாவின் உதட்டில் முத்தமிட்டார். இதை  பார்த்து அதிர்ச்சியடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சக வீராங்கனைகள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து தான் செய்த செயலுக்காக ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசா, லூயிஸ் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம், ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியில் இருந்து லூயிஸ் ருபியாலெசை 90 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் தன்னுடைய செயலுக்கு லூயிஸ் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ அனுப்பியது.

இந்நிலையில் வீராங்கனைக்கு உதட்டில் முத்தம் கொடுத்து சர்ச்சைக்கு ஆளான லூயிஸ், தனது சம்மேளன தலைவர் பதவியை ராஜிமானா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link