Share via:
ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது முதல் தற்போது 4வது முறையாக புவி சுற்வட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் தேதி பி.எஸ்.எல்.சி. சி-57 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 3 நிமிடத்திலேயே ஆதித்யா எல்&1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது.
அதன் பின்னர் புவிவட்டப் பாதையில் தனது பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலத்தின் உயரத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 3 முறை புவி சுற்றுவட்டப் பாதை உயரம் உயர்ந்துள்ள நிலையில் தற்போது 4வது முறையாக உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை உயரம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
4 மாத காலத்திற்கு சூரியனை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆய்வுகள் குறித்தும் விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.