Share via:
ஐபோன்கள் என்றால் அடுத்தடுத்த அறிமுகங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கத்தான் செய்கிறது. உடனே இணையத்தை அலசி ஆராய்ந்து தாங்கள் எதிர்பார்க்கும் பீச்சர்ஸ்கள் இருக்கிறதா என்று கண்டுபிடித்து வாங்கி விடுகிறார்கள் வாடிக்கையாளர்கள்.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இன்று ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
இதன் அறிமுக விழா இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை இணையவாசிகள் இணையத்தில் கண்டு பயன்பெறலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இன்று அறிமுகப்படுத்த உள்ள ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்களை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் சேர்த்து 2 ஸ்மார்ட் வாட்ச் மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
ஐபோன்களின் முந்தைய வெர்ஷனை விட இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய மாடலில் அதிவேக சார்ஜிங் வசதி இருக்கும் என்றும், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்டுக்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி போர்டு வழங்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் ஐபோன் வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகரித்துள்ளது.
மேலும் இதில் அதிநவீன பிராசசர், கேமரா சார்ந்த முக்கிய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் பேட்டரி பேக்கப் ஆகியவையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள், சாம்சங் புரொஜெக்டர் அறிமுகம் செய்த ஐபோன் 14 மாடலை விட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதால் வாடிக்¬யாளர்களின் முதல் தேர்வாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட அப்டேட்களுடன் இன்று வெளியாக உள்ள ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் விலை அதன் தரத்திற்கேற்ப சற்று விலை கூடுதலாக இருக்கலாம். அதன்படி ஐபோன் 15 ப்ரோ மாடலுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாயும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 20ஆயிரம் ரூபாயும் விலை கூடுதலாக இருக்கும் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது.
எவ்வளவு இருந்தால் என்ன ஐபோன் வைத்திருந்தாலே கெத்துதான், அதிலும் புதிய மாடல்களை வைத்திருந்தால் கேட்கவா வேண்டும் என்கிறார்கள் ஐபோன் வாடிக்கையாளர்கள்.

