மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த உதயநிதி… ’உள்ளே” தள்ளும் ஆக்ஷனுக்கு தயாராகும் பா.ஜ.க.

‘உங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்’ என்று உதயநிதியின் கேள்வி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அமைச்சருக்கு பாஷை தெரியவில்லை’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்திருக்கிறார். அவர், ‘யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் […]
எண்ணெய் கசிவு பாதிப்பு! குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6 ஆகிய 7 பகுதிகளில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 9,001 குடும்பங்களின் துயரை […]
வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பாலம்: தற்காலிக சாலை அமைப்பு!

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய பெருமழை வெள்ளத்தால் பாலம் உடைந்த நிலையில், குருங்காட்டூர் வழியாக ஏரல் பகுதிக்கு செல்ல தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெருமழை வெள்ளத்தில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த […]
சாக்ஷிக்கு ஆதரவு தரும் தங்க மகன் விஜயேந்தர் சிங்… அடுத்தது யாரோ..?

மல்யுத்த வீராங்கனை சாக்ஷிக்கு ஆதரவாக பல பிரபல்லங்கள் தொடர்ந்து களத்தில் குதித்து வருகிறார்கள். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அவர் பெற்ற பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக்கொடுத்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் சாக்ஷிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். , சாக்ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜேந்தர் சிங், “ஒரு விளையாட்டு வீரராக சாக்ஷி மாலிக்கின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில் […]
குறைகளை நிவர்த்தி செய்ய உறுதி! தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.

பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறி உறுதியளித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் […]
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்! எம்.பி.தொல்திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. மக்களவையில் பார்வையாளர்ள் இருக்கையில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர். அவர்களின் கைகளில் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருப்பதை […]
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று மக்களவையில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர். அந்த இருவரின் கைகளிலும் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருந்ததாக அவை உறுப்பினர்கள் வெளியில் வந்து பேட்டி அளித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட அதே நாளான டிசம்பர் 13ம் தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 […]
கதறியழுத சாக்ஷி மாலிக் கண்ணீருக்கு இந்தியாவில் யாருமே பதறவில்லையா..?

இவர்தான் இந்தியாவின் அடையாளம், இவர்தான் ஒரு போராட்டதை எப்படி வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்பதற்கு மாடல் பெண்மணி என்றெல்லாம் சாக்ஷி மாலிக் களத்தில் நின்று இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக் கொடுத்தபோது அத்தனை பேரும் பாராட்டினார்கள். இன்று அவர் கதறியழுது கண்ணீர் சிந்தினாலும் கண்டுகொள்ள யாருமே இல்லை என்பது, இந்தியர் ஒவ்வொருவருக்கும் தலைக்குனிவு. அவர் பிரிஜ் பூஷன் குறித்த செக்ஸ் குற்றச்சாட்டை விசாரணை செய்ய வேண்டும் என்று போராட்டக் களத்தில் நின்றார். 40 நாட்கள் களத்தில் நின்று போராடினார். […]
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஏற்பாடுகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு!

வருகிற 2024ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். உலக முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, வருகிற 2023ம் ஆண்டுக்குள் […]
சிறந்த ஜூரி வெற்றிமாறன்: சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட வடிவேலு!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று (டிச.21) நடைபெற்றது. இதில் சிறந்த நடிகராக நடிகர் வடிவேலுவும், சிறந்த ஜூரியாக இயக்குனர் வெற்றிமாறனும் அறிவிக்கப்பட்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் வசந்த் பாலனின் அநீதி திரைப்படம், மந்திரமூர்த்தியின் அயோத்தி திரைப்படம், தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் […]

