News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மக்களுக்கு ஆறுதல்!

பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது […]

உதயநிதியின் சனாதனத்துக்கு அடுத்து தயாநிதி மாறனின் கழிவறை பேச்சு – ஆட்டம் காணும் இந்தியா கூட்டணி

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தயாநிதி மாறனின் பழைய வீடியோ பேச்சு இப்போது வைரலாகிவருகிறது. அதாவது, ’உத்தரபிரதேசம், பிகார் மாநிலங்களில் இந்தி மொழி மட்டும் கற்றவர்கள், எங்களுடைய தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர்’ என்று பேசியிருந்தார். இது இப்போது இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. தமிழக தலைவர்கள் பேசும் பல விவகாரங்கள் இந்திய அளவில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. சமீபத்தில் […]

நெல்லை கனமழை: 16 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தகவல்!

வரலாறு காணாத கனமழையால் திருநெல்வேலியில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதிகனமழை காரணமாக பெருவெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு மக்களை மீட்டெடுத்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏபட்டுள்ள மொத்த சேதம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நெல்லை கனமழையில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,064 பேர் வீடுகளை […]

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தொடர் ஆய்வு! கோரிக்கை நிறைவேற்ற உறுதி!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெருமழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு பத்திரமாக மீட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் […]

முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா: தே.மு.தி.க. பொதுசெயலாளர் பிரேமலதா பங்கேற்பு!

சென்னை வியாசர்பாடியில் செயல்பட்டு வரும் செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் கிறிஸ்தமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள்  இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இயேசுபிரான் அவதரித்த தினமான இன்று கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும், கேக் உள்ளிட்ட இனிப்பு பொருட்களை பரிமாறிக் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடசென்னையில் செயல்பட்டு வரும் செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்திற்கு கிறிஸ்துமஸ் நன்னாளை […]

தூத்துக்குடியில் மருத்துவ முகாம்: கனிமொழி எம்.பி.நேரில் ஆய்வு!

தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டு வரும் மருத்துவ முகாமை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]

எண்ணெய் கசிவை நீக்கக் கோரி போராட்டம்! திருவொற்றியூரில் பரபரப்பு!

எண்ணூரில் படிந்துள்ள எண்ணெய் கசிவை உடனடியாக நீக்கக் கோரி சென்னை திருவொற்றியூரில் சின்னக்குப்பம் மீனவ மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மிக்ஜாம் புயலின் போது கசிந்த எண்ணெய் படலம் எண்ணூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிப்புள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், மீன்பிடி படகுகள், வலைகள் என அனைத்தும் நாசமானதால் அப்பகுதி மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீனவ குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட படகுகளை சீரமைக்கவும் நிவாரண தொகையை அறிவித்துள்ளது. மேலும் எண்ணெய் கசிவை […]

9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிதான் மிகப்பெரிய பேரிடர்! அமைச்சர் உதயநிதி தடாலடி!

9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிதான் மிகப்பெரிய பேரிடர் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்தில் இளம்வயதிலேயே அமைச்சர் உதயநிதி, இந்திய அளவில் மிகப்பெரிய பிரபலமாக மாறியதற்கு அவரது துணிச்சலான பேச்சு ஒரு காரணமாகும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் சனாதனம் குறித்த பேச்சு. இந்த விவகாரத்தில் சட்டசிக்கல்களை நான் சந்திக்கத் தயார் என்று மிகவும் தைரியமாக அமைச்சர் தயாநிதி பேசியது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த […]

நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள்: அமைச்சர் ரூ.125.50 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கினார்!

நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு ரூ.125.50 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்பை அமைச்சர் உதயநிதி வழங்கி அவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்   சென்னை வாலாஜாரோட்டில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் இன்று (டிச.23) சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,827 நகர்ப்புர மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,472 சகோதரிகளுக்கு ரூ.125.50 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பை வழங்கினார். […]

சென்னையில் கிறிஸ்துமஸ் விழா: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்பு!

சென்னை சாந்தோம் கதீட்ரல் ஆரம்பப் பள்ளியில் த.மா.கா. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (டிச.22) நடைபெற்றது. வடசென்னை த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ. சாக்கோ இவ்விழாவுக்கு  தலைமை தாங்கிய நிலையில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகளை வழங்கினார்.    அதன் பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மகிழ்ச்சியாக நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில், சென்னை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, மாநில […]