News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

இவர்தான் இந்தியாவின் அடையாளம், இவர்தான் ஒரு போராட்டதை எப்படி வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்பதற்கு மாடல் பெண்மணி என்றெல்லாம் சாக்‌ஷி மாலிக் களத்தில் நின்று இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக் கொடுத்தபோது அத்தனை பேரும் பாராட்டினார்கள். இன்று அவர் கதறியழுது கண்ணீர் சிந்தினாலும் கண்டுகொள்ள யாருமே இல்லை என்பது, இந்தியர்  ஒவ்வொருவருக்கும் தலைக்குனிவு.

அவர் பிரிஜ் பூஷன் குறித்த செக்ஸ் குற்றச்சாட்டை விசாரணை செய்ய வேண்டும் என்று போராட்டக் களத்தில் நின்றார். 40 நாட்கள் களத்தில் நின்று போராடினார். ஆனால், அவரது கோரிக்கைகள் எதையும் ஆளும் பா.ஜ.க. அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

இந்த நிலையில், இந்தியாவின் மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI) உயர் பதவிக்கான தேர்தலில் சர்ச்சைக்குரிய நபரான பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கின் விசுவாசியான சஞ்சய் சிங் வெற்றி பெற்றுள்ளார். 15 பதவிகளில் 13 இடங்களில் வெற்றி பெற்றதால், புதிய WFI தலைவர் பதவியை சஞ்சய் ஏற்றுக்கொண்டார். இந்த விஷம்தான் சாக்‌ஷி மாலிக்கை களத்திலிருந்து ஒரேயடியாக வெளியேற்றியுள்ளது.

இதுகுறித்து பேசிய சாக்‌ஷி மாலிக், “நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷன் போன்ற ஒரு நபர், அவரது தொழில் பங்குதாரர் மற்றும் நெருங்கிய உதவியாளர் WFI இன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், நான் மல்யுத்தத்தை விட்டுவிடுகிறேன்” என்று கண்ணீர் மல்க பேசினார் சாக்‌ஷி.

சாக்‌ஷி ஒரு சாதாரண வீராங்கனை அல்ல. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றி பெற்றவர். செப்டம்பர் 3, 1992 இல் பிறந்த மாலிக், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தனது குறிப்பிடத்தக்க சாதனைக்காக பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். ஒரு போட்டியில், அவர் தொடக்கத்தில் 0-5 என பின்தங்கி இருந்த போதிலும், கிர்கிஸ்தானின் ஆசிய சாம்பியன் ஐசுலு டைனிபெகோவாவை 8-5 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார்.

அவரது மல்யுத்தப் பயணம் 12 வயதில் ரோஹ்டக்கில் தொடங்கியது, மேலும் 2010 இல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றதன் மூலம் சர்வதேச வெற்றியின் முதல் சுவையை அவர் அனுபவித்தார். 

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில்  தங்கப் பதக்கம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் என்று நிறையவே பதக்க வேட்டையாடியவர். இத்தகைய வீராங்கனையின் கண்ணீர் இந்தியாவில் கேட்பாரற்று போகிறது என்பதும் இதை இந்தியர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நகர்வதும், பரிதாபம்.

விளையாடி வெற்றி பெற்று பதக்கம் வாங்கிய ஒரு பெண்ணுக்கு இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுஜனங்கள் நிலை என்னவாகும் என்பதைவிட, இப்படி இருந்தால் எப்படி பதக்கம் வெல்வது..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link