News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மாணவனுடன் ரகசிய தனிக்குடித்தனம்… செக்ஸ் வழக்கில் ஆங்கில ஆசிரியை

டீன் ஏஜ் பருவத்தில் ஆசிரியர் மீது பெண் பிள்ளைகளுக்கும் ஆசிரியை மீது பையன்களுக்கும் ஈர்ப்பு வருவது இயல்பான விஷயமே. எல்லோருமே இந்த கட்டத்தை கடந்தே வந்திருப்பார்கள். ஒருசில பிள்ளைகள் இதில் எல்லை மீறும்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியரும் ஆசிரியையும் அவர்கள் தலையில் கொட்டு வைத்து ஹார்மோன் லீலைகளை புரிய வைப்பார்கள். ஆனால், காதலை சொன்ன மாணவனுடன் ஆசிரியை ஓடிப்போனதும், ரகசியமாக தனிக்குடித்தனம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது போக்ஸோ வழக்கில் ஆசிரியை சிறைக்குப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, சோழிங்கநல்லூரில் […]

எண்ணூர் எண்ணெய் கசிவு: சவுமியா அன்புமணி பார்வையிட்டார்!

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் பகுதிகளை பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.   மிக்ஜாம் பெருமழையின் போது மழைநீருடன் சேர்த்து எண்ணெய்யும் கசிந்து எண்ணூர் பகுதியில் பெருக்கெடுத்து ஓடி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 வாரங்களுக்கு மேலாகியும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் எண்ணூர், எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி, பங்கிங்காம் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர்,  தாழங்குப்பம், […]

மீண்டும் மிரட்டப் போகும் கனமழை: தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி!

தென் மாவட்டங்களில் ஏற்கனவே வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சூழ்ந்த பெருவெள்ளம் தற்போதும் கூட வற்றாமல் இருந்து வருகிறது. பொது மக்கள் அனைத்து உடமைகளையும் […]

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நிவாரண பொருட்களை வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார். குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் […]

ரஜினிகாந்த் ரசிகர்கள்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்!

நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது ரசிகர்கள் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.   குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் வாயிலாக […]

தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (21.12.2023) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களின் துயரில் பங்கேற்று ஆறுதல் கூறி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம், வெள்ளான் விளை, மைஞானபுரம், சாத்தான்குளம், தூத்துக்குடி டவுன் பகுதி மக்களுக்கு ஐந்தாயிரம் பேருக்கு பிரியாணி – தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், ரஸ்க், பெட்சிட், மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் […]

தென் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்: பாளையங்கோட்டை பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள சமாதானபுரத்திற்கு சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மக்களை சந்தித்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]

பொன்முடிக்கு அரசியல் வாழ்க்கை முடிஞ்சே போச்சு… அமைச்சர்கள் மல்லுக்கட்டு

ஆளும் தி.மு.க.வுக்கு சோதனை மேல் சோதனை என்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக செயல்பட முடியாமல் ஜெயிலுக்குள் இருக்கும் நிலையில், அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் நிலை உருவாகியுள்ளது.   வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதன் […]

47வது சென்னை புத்தக கண்காட்சி அறிவிப்பு! உற்சாகத்தில் வாசகர்கள்!

சென்னை நந்தனத்தில் 47வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 1ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் நடைபெறும் புத்தகக்கண்காட்சிக்காக காத்திருக்கும் வாசகர்கள் ஏராளம். ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் அனைத்து வகையான புத்தகங்களை தேடி வாங்கி படிப்பதில் வாசகர்கள்,  இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒவ்வொரு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை விற்பனை முடிவுகள் சொல்கின்றன. அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற (2024) ஜனவரி மாதம் 4ம் தேதி (வியாழக்கிழமை) […]

தேங்கிய வெள்ளநீர்: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நாசமான ஆவணங்கள்!

மழைநீர் வெள்ளம் 36 மணி நேர அளவுக்கு தேங்கியதால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.     வரலாறு காணாத அதிகனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் மழைநீர் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளது. மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது சாலைகள், தண்டவாளங்கள் நீருடன் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து […]