News

Follow Us

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று (டிச.21) நடைபெற்றது. இதில் சிறந்த நடிகராக நடிகர் வடிவேலுவும், சிறந்த ஜூரியாக இயக்குனர் வெற்றிமாறனும் அறிவிக்கப்பட்டனர்.


21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் வசந்த் பாலனின் அநீதி திரைப்படம், மந்திரமூர்த்தியின் அயோத்தி திரைப்படம், தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் தொழில் உள்ளிட்ட  திரைப்படங்கள் திரையிடப்பட்டன.


இவற்றில் அயோத்தி சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. 2வது சிறப்பு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட உடன்பால் திரைப்படத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படடது. மேலும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதைத்தொடர்ந்து வடிவேலு சிறந்த நடிகராக (மாமன்னன்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அயோத்தி திரைப்படத்துக்காக நடிகை பிரீத்தி அஸ்ரானி சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். போர் தொழில் திரைப்படத்திற்காக கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீதர்சாரங் சிறந்த எடிட்டராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த குறும்படமாக லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link