News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ராமருக்கு சூரிய திலகம்… தேர்தலுக்கு பா.ஜ.க. புது வகை சீட்டிங்

மக்களவைத் தேர்தல் 2024ல் பா.ஜ.க.வின் முக்கியமான சாதனையாக ராமர் கோயி காட்டப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி ராமர் கோயிலைத் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பா.ஜ.க. பெருமையுடன் சொல்லிவரும் நிலையில், ராமர் நெற்றியில் சூரியக் கதிர் பொட்டு விழுந்திருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்தார்கள். ராம நவமியன்று மிகச்சரியாக பகல் 12.01 மணிக்கு அயோத்தி கோயிலில் உள்ள ராமரின் முன்நெற்றியில் திலகம் போல சூரியக் கதிர்கள் விழுந்தன. சுமார் இரண்டு, இரண்டரை நிமிடங்கள் நிகழ்வு […]

நடிகர் விஜய் பா.ஜ.க.வின் பி டீம் என்பது உண்மையா..? இதோ தாய்க்கு ஒரு சாய்பாபா கோயில்

மதத்தை முன்னிறுத்தி மக்களை கவர்வது தான் பா.ஜ.க.வின் தேர்தல் பாலிசி. அந்த வகையில் ஜோசப் விஜய்யை இப்போது களத்தில் இறக்கியிருக்கிறார்கள். 2026 தேர்தலில் தி.மு.க. வாக்குகளை உடைப்பதற்கு பயன்படுத்தப் போகிறார்கள் என்றெல்லாம் ஹேஸ்யம் கூறப்பட்டு வந்தது. கிறிஸ்தவரான விஜய் எப்படி இந்துக்கள் வாக்குகளை பெற முடியும், விஜய் பா.ஜ.க.வின் டீம் இல்லை என்று அவரது மன்றத்தினர் கூறிவந்த நிலையில் இந்து கோயில் ஒன்றே கட்டிக்கொடுத்து இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. ஒரு சாய் பாபா கோயிலில் விஜய் […]

பணீந்தர ரெட்டிக்கு பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பணத்தில் ஸ்பெஷல் கவனிப்பு..? கிடுகிடு குற்றச்சாட்டு

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முறைகேடு இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த கோயில் பணமான 6,648 ரூபாயை செயல் அலுவலர் ரவிச்சந்திரன் கொள்ளை அடித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 5.2.2020 அன்று தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனை அறநிலையத் துறை ஆணையராக இருந்த பணீந்தர ரெட்டி பார்வையிட சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்திருக்கிறார். அவருக்கு நாடியம்மன் கோவில் பணம் 6,648 ரூபாயை செலவு செய்ததாக நாடியம்மன் கோயில் செயல் அலுவலர் […]

போலி சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு மட்டும் அப்பல்லோ அலோபதி…. ஈஷா சீடர்களுக்கு ஆயுர்வேதமா..?

அதனை நம்பக்கூடாது என்று மக்களுக்குப் பாடம் எடுத்த ஜக்கி வாசுதேவ், தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். ஜக்கியின் பேச்சைக் கேட்டாலே பரவசமாக இருக்கும். பாதரசம் உண்பது, பாம்பு விஷம் குடிப்பது, போலி மருத்துவத்தை பரப்புவது, ஆயுர்வேதாவும், சித்தாவும் மட்டுமே சரியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அப்பல்லோ மருத்துவமனையில் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  மூளையில் ரத்த கசிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை […]

இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நிலக்கோட்டையில் தேவேந்திரகுல வேளாளர்கள் திடீர் போராட்டம்… அடுத்து கருப்புக்கொடி, தேர்தல் புறக்கணிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீமகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில். இந்த கோயிலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு தனி மண்டகப்படி அமைத்துத் தரும்படி நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இந்து அறநிலையத் துறை சார்பில் இதற்கு அனுமதி வழங்குவது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி மண்டகப்படி கட்டித்தர மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து நேரடியாக ஒட்டுமொத்த மக்களும் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

பழனி முருகன் கோயிலில் மாற்று மதத்தினருக்குத் தடை… வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்காவில் இந்துக்கள் நுழையலாமா..?

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் […]

சென்னை இரண்டாவது தலைநகர்… ஆளுநர் பதவிக்கு ஆப்பு… திருமாவளவனின் தீர்மானங்கள் செல்லுபடி ஆகுமா..?

இந்தியா கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கும் நிலையில், திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘எனக்கு திருமாவளவன் சட்டக் கல்லூரி மாணவராக திமுக மாணவர் அணியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள்தோறும் கொள்கை வலு பெரும் இளம் காளையாக தான் இன்று ஜனநாயகம் காக்கும் இந்த மாநாட்டை […]

அய்யா கோயிலில் எடப்பாடி பழனிசாமி… நாடாளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க. குழு ரெடி

கால் மூட்டுவலி காரணமாக அயோத்தி ராமர் கோயிலுக்குப் போகவில்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வைகுண்டர் சுவாமி திருக்கோயில் அன்னதர்மத்தை தொடங்கிவைத்து அய்யா வழி அன்புக்கொடி மக்களிடம் கலந்துரையாடினார். அய்யா வழி கோயிலுக்குச் செல்பவர்கள் மேல் சட்டையைக் கழட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி மேல் சட்டை இல்லாமல் தலையில் தலைப்பா கட்டி சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை […]

ராமர் கோயில் பூசாரிகள் முகத்தில் பயம், அச்சம்… தி.மு.க.வின் அடக்குமுறைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கண்டனம்

நாடு முழுவதும் பால ராமர் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.கள் அனைவரும் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், இன்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னை, மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள அறிக்கையில், ‘அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கோதண்டராமர் கோயில் அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. இங்குள்ள பூசாரிகள் […]

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை… காலையில் பார்த்தால் அதிர்ஷ்டமாம்..!

உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், குழந்தை ராமர் சிலை ஒன்று நிறுவப்பட்டு, திறக்கப்பட இருக்கிறது. அந்த சிலையை காலையில் பார்ப்பது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற தகவல் காரணமாக சிலையின் உருவம் விறுவிறுப்பாக பரவி வருகிறது.   இரண்டு நாட்களுக்கு முன்பு, குழந்தை ராமர் சிலையின் கண்கள் மஞ்சள் துணியால் மூடப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியானது. இதையடுத்து அந்த விக்ரகத்தின் கண்களைத் திறந்துள்ள படம் வெளியாகி […]