News

Follow Us

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவில் திறக்கப்படுகிறது. இந்த கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இங்கு ஸ்ரீராமர் தவிர அன்னபூரணி, அனுமன், மகரிஷி வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகஸ்தியர், நிஷாத் ராஜ், ஷப்ரி போன்ற கோவில்களும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன. இங்குள்ள தூண்களில் சூரியன், சிவன், பார்வதி, விநாயகர் சிலைகள் மற்றும் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த கும்பாபிஷேக விழாவிற்காக 460 கைவினைஞர்கள் உட்பட 4,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவிலின் தரை தளத்தை தயார் செய்வதற்காக இரவு பகலாக உழைத்து வருகின்றனர். ஆனாலும், இந்த கோயில் முழுமையடைவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் ஆகுமென்று தெரிகிறது. ஆனாலும், தேர்தல் வருவதற்கு முன்னரே திறப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே விழா நடத்தப்படுகிறது.

இந்தியா முழுமையிலும் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் திறப்புவிழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சாதாரண பொதுமக்கள் நான்கு நாட்களுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர்.

நம் தமிழகத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மரியாதை நிமித்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ராமர் கோயில் திறப்புவிழாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்கள் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இன்னமும் முடிவு எடுக்காமல் உள்ளனர். சோனியா காந்தி கலந்துகொள்வது விமர்சனத்தை எழுப்பலாம் என்பதால் ராகுல், பிரியங்கா அல்லது கார்கே கலந்துகொள்வார் என்றே தெரிகிறது.

அதேபோல், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வது தர்மசங்கடத்தை உருவாக்கும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் சார்பாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

 அதுசரி, சிறுபான்மையினர் விழாக்களுக்கு எல்லாம் ஸ்டாலின் போகிறார் என்றால், இந்துக்களை சமாளிக்கத்தானே துர்கா ஸ்டாலின் இருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link