வைரலாகும் விஜய் – த்ரிஷா ஸ்பெஷல் சல்யூட்

முதல்வர் விஜய் இன்று முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்தார். இதையடுத்து அணிவகுப்பு ஊர்வலத்தில் கம்பீரமாக வலம் வந்தார். கேலரியில் அமர்ந்திருந்த விஜபிகளுக்கு சல்யூட் அடித்தபடி வந்தார். விஜய்யைப் பார்த்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபா கைகூப்பி வணக்கம்வைத்தனர். அவர்களுக்கு சல்யூட் வைத்த விஜய், தனக்காக எழுந்து நின்ற த்ரிஷாவைப் பார்த்ததும் ஸ்பெஷல் சல்யூட் அடித்தார். த்ரிஷா அந்த சல்யூட்டுக்கு தன்னுடைய ஸ்டைலில் ஒரு சல்யூட் அடித்தார். விஜய் அதைப் பார்த்து புன்னகை பூத்தார். இதை பார்த்த […]
விஜய் வழங்கிய தகைசால் தமிழர் விருது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்

தகைசால் தமிழர் விருது என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்கும் பாடுபட்ட பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது. விஜய் ஆட்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது இன்று சுதந்திரதின விழாவில் வழங்கப்பட்டது. இவர் டாக்டர் ராமதாஸின் சம்பந்தி. அதாவது கிருஷ்ணசாமி மகள் சௌமியாவைத்தான் அன்புமணி ராமதாஸ் திருமணம்முடித்திருக்கிறார். இந்த விருது மூலம் காங்கிரஸ் கட்சியையும் பாமகவையும் தங்கள் பக்கம் இழுத்துள்ள விஜய், இந்த அரசை தாங்கிப்பிடிப்பது போன்று […]
கோட்டையில் கொடி ஏற்றிய விஜய்…. அட்டகாச அறிவிப்புகள்

சென்னை கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கொடியேற்றினார். காவல் துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். கொடி வணக்கம் செலுத்தினார். இன்று விஜய் நிகழ்த்திய சுதந்திரதின உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. என் நெஞ்சில் குடியிருக்கும் என்று வழக்கமான அவரது டிரேட் மார்க் வசனத்துடன் பேச்சைத் தொடங்கினார் விஜய். அவர் பேசுகையில், ‘’இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் பெருமையை எனக்கு வழங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஜென்ஸி இளைஞர்களுக்கும் எனது […]
வைரலாகும் மாணவிகள் மது வீடியோ..? விஜய் என்ன நடவடிக்கை?

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். தக்கலை போலீசார் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ், ‘’பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் அவலம் தொடர்கிறது: மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து […]
விஜய்க்கு ரிலாக்ஸ் நியூஸ்… கரூர் பணி ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, இன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது விஜய்க்கு பெருத்த ரிலாக்ஸ் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடந்த விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியான 31 […]
விவசாயிகள் போராட்டத்தில் எடப்பாடி. வேலுமணி டீமில் தங்கமணி ஜம்ப்

இன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின் கட்டணம், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விஜய் அரசுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இந்த போராட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டது அதிமுவினரை குஷிப்படுத்தியிருக்கிறது. இன்று பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் சுமை, பாசன நீர் பற்றாக்குறை, காவிரி நீர் […]
கருணாநிதி, ஜெ. ஸ்டாலினால் முடியாததை சாதிப்பாரா விஜய்..? புதிய தலைமைச்செயலகம்.

கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் இருந்தே தலைமைச் செயலகத்தை மாற்றும் முயற்சி நடந்துவருகின்றன. குயீன் மேரீஸ் கல்லூரியை ஜெயலலிதா மாற்ற நினைத்தார். அண்ணா சாலையில் கருணாநிதி அமைத்தார். ஸ்டாலினும் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், விஜய் காலத்தில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் நடவடிக்கையாக முதல்வர் அறை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படும் பணி தொடங்குகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது […]
மாணவர் அமுதன் கொடூர கொலை… போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், போதைப்பொருள் கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால், இருபதுக்கும் மேற்பட்டோரால் இரும்பு ராடு, கத்தி போன்ற ஆயுதங்களால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை, மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதல் என்று அமைச்சர் ராஜ்மோகன் வழக்கை திசை திருப்பும் வகையில் பேசுவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்கெனவே இருந்த மோதல், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, இந்தத் […]
காவல் துறையில் அதிரடி மாற்றங்கள்.. லஞ்சம், போதை, டிரான்ஸ்ஃபர்

விஜய் ஆட்சியில் காவல் துறையின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அதனால், ஊழல், லஞ்சத்துக்கு எதிராக காவல் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே பொதுமக்கள் லஞ்சப் புகார்களை ‘7871723000’ என்ற எண்ணில் வாட்ஸ்அப் அல்லது நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது இந்நிலையில் காவல் துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கியுள்ளார். அதில் அவர், ‘’எந்தவொரு சூழலிலும் நான் லஞ்சம் வாங்க […]
தவெக 100 நாட்களுக்குள் 104 புரிந்தணர்வு ஒப்பந்தங்கள். ஸ்பீடு விஜய்

இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர். முதலமைச்சர் முன்னிலையில் பல முக்கிய தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் இன்று நடைபெறும் வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026 மூலம் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் ₹67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, […]

