Share via:
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ள விவகாரம், தவெகவில்
மிகப்பெரும் அதிர்ச்சிகளை உருவாக்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக 2021ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த
அடிப்படையில் அமலாக்கத்துறையும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது. அடுத்தகட்டமாக கடந்த நவம்பர் 6 ஆம் தேதி விஜயபாஸ்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளருமான சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இவர் அதிமுக–வில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சி. விஜயபாஸ்கருக்கு, புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் நீண்ட காலமாகச் செல்வாக்கு மிக்க முகமாக வலம் வரும் அவர், தற்போது தவெக–வின் களப்பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறார். இவர் தவெக விராலிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள சூழலில் அவருக்கு எதிராக வழக்கு தீவிரம் அடைந்துள்ளது.
நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராவாரா அல்லது அவகாசம் கோருவாரா என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், இத்தனை பெரிய ஊழல்வாதிக்கு சீட் கொடுப்பது தவெகவின்
ஊழல் நிலைப்பாட்டுக்குச் சிக்கலாகிவிடும். எனவே இடைத்தேர்தலில் சீட் தரவேண்டாம் என்று
தவெகவினர் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த வழக்கில் தண்டனை பெற்றால் எம்.எல்.ஏ.வானாலும்
பதவியை இழக்க நேரிடும். எனவே, வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று விஜய்யிடம் கூறியிருக்கிறார்கள்.
இதை விஜய்யும் ஏற்றுக்கொண்டுள்ளாராம்.
தன் மீதுள்ள குற்றத்தை சட்டப்படி சந்தித்து வெற்றி பெற்றபிறகு
தேர்தலில் நிறுத்தலாம் என்று விஜய் நினைக்கிறாராம். அதனால், சீட் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

