Share via:
திமுகவை விட அதிக விலைக்கு மாணவர்களுக்கு சைக்கிள் வாங்கியதில்
தவெக ஊழல் என்று செய்திகள் வெளியானது. அதன் உண்மையான விலை நிலவரம் இப்போது தெரியவர,
திமுகவின் பொய் குற்றச்சாட்டு அம்பலமாகியுள்ளது.
ஹீரோ சைக்கிள் நிறுவனம் ஒரு மாணவிக்கான சைக்கிள் செட் விலையை ஆரம்பத்தில்
7,361.10 ரூபாய் என்று கேட்டிருக்கிறது. ஆனால் 9 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு,
அதே செட்டை 5,130 ரூபாய்க்கு கொடுக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒரு மாணவிக்கு
மட்டும் சுமார் 2,231.10 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் 5,32,388 மாணவ மாணவிகளுக்கு இந்த முறை
வெறும் சைக்கிள் மட்டும் இல்லை, கூடவே ஹெல்மட் மற்றும் வாட்டர் பாட்டல் கொண்ட ஒரு முழு
தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த 9 கட்ட பேச்சுவார்த்தையினால் அரசுக்கு மொத்த திட்டச் செலவில்
116.12 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 29.60% சேமிப்பு. இதில்
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள நவீன சைக்கிள்களின்
அடிப்படை விலை குறைந்துள்ளது. மாணவியருக்கான சைக்கிள் விலை கடந்த ஆண்டை விட 4.70 ரூபாய்
குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போடும் Helmet-க்கு மட்டும் 18% ஜிஎஸ்டி சேர்த்து
560.50 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 276.20 கோடி ரூபாய் செலவில்
இந்த கொள்முதல் நடக்கிறது. இதில் 2,95,255 மாணவிகள் பயன் பெறப்போகிறார்கள். நவீன சைக்கிள்
என்று சொல்லும்போதே மாணவர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
இதுகுறித்து தவெக ஐ.டி.டீம், ‘’2025–2026-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2026–2027-ஆம் ஆண்டில் வழங்கப்படவுள்ள மிதிவண்டிகள் சுமார்
ரூ.6 குறைவான அடிப்படை விலையில் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அதன்படி, மாணவர்களுக்கு ரூ.4,369 என்ற விலையிலும், மாணவிகளுக்கு ரூ.4,245 என்ற விலையிலும் தவெக அரசு கொள்முதல் செய்யவுள்ளது.
புதுடெல்லி மற்றும் புதுச்சேரி அரசுகள் மிதிவண்டிகளைக் கொள்முதல் செய்யும்
விலையைவிடக் குறைந்த விலையில் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யவுள்ளது.
வெறும் வடிவமைப்பு
மாற்றத்துடன் நின்றுவிடாமல், தரம், பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் பயன்பாட்டு வசதிகளிலும்
குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2026–2027-ஆம் ஆண்டுக்கான
மிதிவண்டிகளில் இடம்பெற்றுள்ள கூடுதல் வசதிகள்: அகலமான டயர்கள், மேம்படுத்தப்பட்ட
உறுதியான சட்டகம், தரமான பிரேக்கிங் வசதிகள், வசதியான இருக்கை, துருப்பிடிக்காத மட்கார்டு, தலைவிளக்கு மற்றும்
தண்ணீர் பாட்டில் ஹோல்டர் வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகளில் மேம்பாடுகள்; அதேசமயம் கடந்த ஆண்டைவிடக் குறைந்த அடிப்படை விலை!
மாணவர்களின் நலனையும் அரசின் செலவினச் சிக்கனத்தையும் கருத்தில் கொண்டு செயல்படும்
மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு’’ என்று திமுகவுக்கு நெத்தியடி
கொடுத்திருக்கிறது.

