Share via:
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலிருந்தே தினமும் கொலை,
கொள்ளைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. காவல் துறையினர் கடுமையாக உழைத்தாலும், போதிய
எண்ணிக்கையில் ஆட்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு சம்பவங்கள் நாள்தோறும் நடக்கின்றன.
எனவே, இந்த பிரச்னைக்கு ஆணிவேரைக் கண்டுபிடித்து, அதை தீர்க்கும்
முயற்சியில் இறங்கியிருக்கிறார் முதல்வர் விஜய். எனவே, தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள்
10 ஆயிரம் புதிய காவலர்களை நியமிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை அன்று மட்டும் 13 கொலைகள் நடைபெற்ற விவகாரம்
தமிழகத்தைக் கடந்து டெல்லி மீடியாவிலும் பேசப்பட்டது. அதோடு, சிறை கைதிகள் தப்பிய
விவகாரம், நகைக்கடை கொள்ளை, பாலியல் குற்றச்சாட்டுகள் என்று நாள்தோறும் எக்கச்சச்க்க
சிக்கல்கள் எழுகின்றன. எனவே, மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக,
முதல்வர் விஜய் உயர்மட்ட ஆய்வு கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினார்.
சமீபத்தில் முதல்வர் நடத்திய 3வது சட்டம் ஒழுங்கு ஆய்வுக்
கூட்டத்தில் தலைமைச் செயலர் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநிலத்தில் பதிவான பல்வேறு கொலை வழக்குகள், அவற்றின் பின்னணி மற்றும் காவல்
துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விரிவாக விளக்கினர்.
மேலும், காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகளவில் உள்ளதை
சீர் செய்தால் மட்டுமே ஆக்டிவாக இயங்கமுடியும் என்று முதல்வர் விஜய்யிடம் போலீஸ் அதிகாரிகள்
தங்களுக்குரிய சிக்கலைச் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, காவல் துறையை வலுப்படுத்தும் விதமாக அடுத்த 6
மாதங்களுக்குள் 10 ஆயிரம் காவலர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்
அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும்
என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல் துறையை பலப்படுத்தினால் மட்டுமே குற்றங்களைத் தடுக்க முடியும்
என்று முதல்வர் எடுத்துவைக்கும் நடவடிக்கை பலத்த பாராட்டை பெற்றுவருகிறது.

