Share via:
முதல்வர் விஜய் நாளை டெல்லி விசிட் உறுதியான நிலையில், தமிழ்நாடு
அரசு இல்லத்தில் முதலமைச்சர் விஜய் தங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த விசிட்டில்
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா சந்திப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 16, 17 ஆகிய தேதிகளில் பிலிப்பைன்ஸ்
நாட்டிற்கு செல்லவுள்ள நிலையில் பிரதமர் சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
அதேநேரம், புது டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தியின் நினைவுப்
புத்தக வெளியீட்டில் பங்கேற்கிறார்
தீபாவளியையொட்டி தமிழகத்தில் அதிக கொலைகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள்
ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பின. இதையடுத்து டெல்லியில் இருந்து தமிழகம் சட்டம் ஒழுங்கு
குறித்து ரிப்போர்ட் கேட்கப்பட்டது. எனவே தமிழக ஆளுநர் அர்லேகர் டெல்லியில் அமித்ஷாவை
சந்தித்து ரிப்போர்ட் கொடுத்துப் பேசினார்.
இந்த நிலையில் திடீரென விஜய் டெல்லி விசிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் முதல்வராக பதவியேற்ற பிறகு பிரதமரை சந்தித்துப் பேசினார்.
இப்போது திடீரென நாளை டெல்லிக்குச் செல்கிறார்.
பிரதமருடன் ஒரு சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், இன்னமும் அது
உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அமித்ஷாவுடன் சந்திப்பு உறுதி. ஏனென்றால், கடந்த முறை
பிரதமர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டுமே விஜய் சந்தித்தார்.
இப்போது கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி அமித்ஷாவிடம் ரிப்போர்ட் கொடுத்திருக்கும் நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும்
வகையில் சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, தமிழக
மீனவர் பிரச்னை, மேகதாது அணை விவகாரம் குறித்து பேசப்படுகிறது.
கடந்த முறை போலவே, நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதிப்பங்கீடு
குறித்து பேசுகிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி சந்திப்புகும் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சோனியா காந்தி புத்தகவிழா பங்கேற்பு, ராகுல் சந்திப்பு
போன்றவை பாஜகவுக்கு எரிச்சலைக் கொடுக்க வாய்ப்பு உண்டு. எனவே, தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை
கொடுக்கும் வகையில் உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் சந்திப்புக்கு அதிக வாய்ப்பு
உள்ளது. அதன்பிறகு நேரம் இருந்தால் மட்டுமே சோனியா, ராகுல்காந்தி சந்திப்பு நடக்கும்.
அப்படி நடக்கும்போது டி.கே.சிவகுமார் பேச்சுக்கு அழுத்தம்திருத்தமாக எதிர்ப்பு தெரிவிப்பார்
என்றும் சொல்லப்படுகிறது.
விவசாயிகளுக்கு நல்ல செய்தியுடன் விஜய் திரும்பட்டும்.

