குடியரசுத் தலைவரை விட்டுவிட்டு நடிகைக்கு அழைப்பு ஏன்? அமைச்சர் உதயநிதி கேள்வி!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நடிகைகள் அழைக்கப்பட்ட நிலையில் ஏன் ஜனாதிபதியை மட்டும் அழைக்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதைப் பற்றி பேசினாலும் அது டிரெண்டிங்காகிவிடுகிறது. எந்த அச்சமும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் முன்வைக்கும் கருத்துக்களும், குற்றச்சாட்டுகளும் இந்தியா முழுவதும் பேச்சுப் பொருளாக மாறி வருகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]
ஜெயலலிதா வலிமையான தலைவர்! புகழ்ந்து பேசிய கனிமொழி எம்.பி.!

மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசிய கனிமொழி எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவை புகழ்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்ட பெருமையை பெற்ற மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா குறித்து தி.மு.க. எம்.பி.கனிமொழி பேசும்போது, ‘‘இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம். ஆதரிக்கிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக பா.ஜ.க. இதனை அரசியலாக்குகிறது என்று தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 1996ம் […]
4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் (செப்.21) மற்றும் நாளையும் (செப்.22) ஆகிய 2 நாட்களில் முதலமைச்சர் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் […]
மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்! புதிய நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு!

புதிய நாடாளுமன்ற மக்களவையில் ஒரு மனதாக மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறி புதிய வரலாற்றை படைத்துள்ளது. நாரி சக்தி வந்தன் அதிநியம் என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா வரலாற்றில் முக்கியம் இடம் பிடித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் சட்ட மசோதா என்ற பெருமையை பெற்ற மகளிர் 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக முழு ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா […]
ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க எடப்பாடி மனு! இன்று விசாரணை!

அ.தி.மு.க. கட்சியின் பெயர், பேரறிஞர் அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இரட்டைக்குழலாக இருந்த அ.தி.மு.க.வை தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக நடத்தி வருகிறார். மேலும் தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதையும் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி […]
மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை! அ.தி.மு.க.வில் குளறுபடி!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் புகைந்து கொண்டிருந்த தீ தற்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்த நிலையில் இருகட்சிக்கும் இடையில் விரிசல் தொடங்கியது. இந்த நேரத்தில்தான் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று டெல்லிக்கு சென்று பா.ஜ.க. மூத்த தலைவரான அமித்ஷாவை சந்தித்து […]
முதல்வர் அலுவலகம் முற்றுகை! பரபரப்பு பின்னணி தகவல்கள்!

சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் முன்பு ஒன்றாக திரண்டு […]
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

தமிழகம் முழுவதும் மொத்தம் 40 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் சப்ளை செய்து வரும் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய மொத்தம் 40 இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னர் சென்னை உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய அதே இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. […]
இந்தியா கூட்டணியில் முதல் விரிசல்! பரபரப்பு பின்னணி!

இந்தியா கூட்டணியில் இருந்து சி.பி.எம். கட்சி திடீரென்று விலகியது அக்கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பா.ஜ.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஒரே நேர்கோட்டு எண்ணத்தில் உருவானதுதான் இந்தியா கூட்டணி. இக்கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரண்ட காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்திருந்தன. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2வது கூட்டம் கடந்த ஜூலை மாதம் […]
காவிரி விவகாரம்! கர்நாடக முதலமைச்சர் எம்.பி.க்களுடன் டெல்லி பயணம்!

காவிரி விவாகரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி விவகாரம் எந்த தலைமுறையில்தான் விடிவுக்கு வரும் என்பது பொதுமக்களின் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் காவிரி நீர் குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுடெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி […]

