News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

டாஸ்மாக்கில் பணிபுரியும் 257 ஊழியர்கள் மது பாட்டலுக்கு கூடுதலாக பணம் வாங்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை நேற்றும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மூடப்பட்ட கடைகளை தற்காலிக மாற்று பணியாளர்களை கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில கடைகள் நேற்றைய தினமே திறக்கப்பட்டது. கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளது.

அதோடு, ‘’பணிக்கு திரும்பவேண்டும், இல்லை என்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்’’ என்று 2,000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது டாஸ்மாக் நிர்வாகம்,

ஆனாலும் ஊழியர்கள், ‘’காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.. கடையின் இதர செலவுகளை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் 1 பைசா கூட கூடதலாக வாங்க மாட்டோம்..’’ என்று போராட்டம் நடத்துகிறார்கள்.

இதையடுத்து தவெக தொண்டர்கள், ‘’டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தாலும் திருந்த மாட்டார்கள்,: இந்த அரசை அவர்கள் மிரட்டி பணிய வைக்க பார்ப்பார்கள். சிலர் திருந்தினலும் பலர் திருந்தவில்லை. கூடுதல் பணம் கொடுத்தால் தான் மது பாட்டில் என கூலி தொழிலாளிகளை ஊழியர்கள் மிரட்டுகின்றனர். மிரட்டியே, மிரட்டியே பழக்கப்பட்டவர்கள். ஒட்டுமொத்தமாக டாஸ்மாக்கை இழுத்து மூடுங்கள். அவர்களே வந்து கெஞ்சட்டும்’’ என்கிறார்கள்.

ஆனாலும் விஜய் பொறுமையாக இருக்கிறார். சுகாதாரப் பணியாளர் போராட்டம் போன்று இதையும் தீர்க்க முடியும் என்றே நம்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link