News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நீதிபதியிடம் கதறிய சவுக்கு சங்கர்

கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை நாங்கள் தாக்கவில்லை என்று காவல் துறை கூறிய நிலையில், மதுரை நீதிமன்றத்துக்கு அவர் ஆஜராக வந்த நேரத்தில் கையில் கட்டு போட்டிருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5ம் தேதி கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் காரில் சோதனையிட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து […]

அம்பானி, அதானி டெம்போவில் கருப்புப்பணம், மோடிக்கு ராகுல் பதிலடி

மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், மோடியின் பிரசார யுக்தியில் முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியை குறை சொல்வதாகவே மாற்றம் அடைந்துள்ளது.  கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் கோடிகளை வாரிக் கொடுத்தவர். இப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டதாக பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலங்கானா மாநிலத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, “முன்னதாக 5 தொழிலதிபர்கள் குறித்து ராகுல் காந்தி பேசி வந்தார். […]

திருநங்கை நிவேதா, சின்னதுரைக்கு ஸ்டாலின் வாழ்த்து

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல சாதனை படைத்திருக்கிறார்ள். இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்த மதிப்பெண் பட்டியலில் திருப்பூர் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது. மேலும், […]

ராமர் கோயிலை ராகுல் இடித்துவிடுவார் என்று மோடி பிரசாரம்

நாடாளுமன்றத்துக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடந்துவருகிறது. இந்த நிலையில் நேற்றைய பிரசாரத்தில் பேசிய நரேந்திரமோடி, ‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் பாபரி மசூதியாக மாறிவிடும்’ என்று பேசி பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். பா.ஜ.க. கூட்டணிக்கு 400 சீட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயிலை வைத்து இந்துக்களை கவர்வது மட்டுமே நரேந்திர மோடியின் பிரசார நோக்கமாக இருக்கிறது. இப்போது உச்சபட்சமாக, ‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிட்டு […]

ராகுலுக்கு எதிராக 181 துணைவேந்தர்கள் போர்க்கொடி

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் துணைவேந்தர்கள் நியமனத்திற்கு பின் ஆர்எஸ்எஸ் இருக்கிறது என பகிரங்கமாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக நாடு முழுவதும் உள்ள 181 துணை வேந்தர்களை ராகுலுக்கு எதிராக கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு. ‘ஒளி தருபவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில், “காங்கிரஸ் […]

ஜெயிலுக்குள் சவுக்கு சங்கர் கையை உடைச்சிட்டாங்க – வழக்கறிஞர் அதிர்ச்சி குற்றச்சாட்டு

கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருக்கிறது, பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சவுக்கு சங்கரை பைப்பினால் அடித்து துன்புறுத்தி கையை உடைத்திருக்கிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் பேட்டி கொடுத்திருக்கிறார். வழக்கறிஞர் பேசுகையில், ‘’நீதிமன்ற பாதுகாப்பில் இருக்கும் போதே அவருக்குப் பாதுகாப்பு இல்லை. அடுத்து காவல் துறை கஸ்டடிக்குப் போகும் பட்சத்தில் அவருக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? எனவே ஜெயில் சூப்பிரண்டெண்ட் மற்றும் பத்து ஜெயில் வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்திற்குப் போகிறோம். […]

தினம் தினம் மின் வெட்டு… கொதிக்கும் ராமதாஸ்

கோடை காலத்தில் மின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு தினசரி மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 383.52 மில்லியன் யூனிட். இதில் மத்திய கிரிட் ( மின் கட்டமைப்பு ) மூலம் 209.52 மில்லியன் யூனிட், அனல் மின் நிலையத்தால் 94.75, ஹைட்ரோ திட்டத்தில் 7.11, காஸ் 5.55, காற்றாலை 22.26, சூரிய […]

செரினாவை மறந்துட்டு சவுக்குக்கு ஆதரவா..? சசிகலாவுக்கு செம தாக்குதல்

தேவர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாருமே வேலைக்குப் போவதில்லை, வெட்டியாக பொழுதைப் போக்கி கஞ்சா போட்டுக்கொண்டு சில்லறைத்தனம் செய்கிறார்கள் என்று ஒரு வீடியோ போட்டிருந்தார் சவுக்கு சங்கர். எனவே, தேவர் இன மக்கள் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் தி.மு.வுக்கு எதிர்ப்பு காட்டுகிறேன் என்ற எண்ணத்தில் சவுக்கு கைதுக்கு ஒரு ட்வீட் போட்டார். அதில், ’சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக […]

திருப்பூர் ஃபர்ஸ்ட் திருவண்ணாமலை லாஸ்ட். +2 தேர்வு முடிவுகள்

தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம […]

சவுக்கு சங்கர் மீது கஞ்சா உள்ளிட்ட புதுப்புது வழக்குகள். எடப்பாடி பழனிசாமி நோ கமென்ட்ஸ்

காவல் துறை அதிகாரிகள் குறித்தும் பெண் அதிகாரிகள் குறித்தும் அவதூறு பேசியதாக பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. சவுக்கு சங்கர் கைது தொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் பாக்கியம் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, “வழக்கு விசாரணைக்காக கைது செய்ய வந்த கோவை போலீசாருடன் சம்பவ இடத்தில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த […]