News

Follow Us

நாடாளுமன்றத்துக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடந்துவருகிறது.
இந்த நிலையில் நேற்றைய பிரசாரத்தில் பேசிய நரேந்திரமோடி, ‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு
வந்தால் ராமர் கோயில் பாபரி மசூதியாக மாறிவிடும்’ என்று பேசி பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.

பா.ஜ.க. கூட்டணிக்கு 400 சீட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக
இந்த தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயிலை வைத்து இந்துக்களை கவர்வது மட்டுமே
நரேந்திர மோடியின் பிரசார நோக்கமாக இருக்கிறது. இப்போது உச்சபட்சமாக, ‘இண்டியா கூட்டணி
ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கு மீண்டும் பாபரி மசூதி வந்துவிடும்’
எனும் ரீதியில் பேசியிருக்கிறார்.

இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெவித்து வருகிறது.
அதேநேரம், ‘அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்வோம் என்று ராகுல் பேசியதையே மோடி குறிப்பிட்டுள்ளார்’
என்று பா.ஜ.க.வினர் இந்த பேச்சை வரவேற்கிறார்கள்.

இதற்கிடையே ராகுல் பிரசாரத்தில் ராமர் கோயில் பற்றி பேசாமல் வழக்கம்
போல் மோடி மீது தாக்குதல் தொடுத்தார். அம்பானி, அதானிக்காக உழைக்கும் மோடி 10 ஆண்டில்
22 பேரை கோடீஸ்வரராக்கி உள்ளார். ஆனால் எங்களின் இந்தியா கூட்டணி கோடிக்கணக்கான மக்களை
லட்சாதிபதிகளாக ஆக்கும்’ என ஜார்க்கண்ட் பிரசாரத்தில் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் நேற்று நடந்த தேர்தல் பேரணியில்
ராகுல் பேசுகையில், ‘‘ஜார்க்கண்டின் பழங்குடியின முதல்வர் ஹேமந்த் சோரனை பா.ஜ.க சிறையில்
அடைத்துள்ளது. அவர் விடுவிக்கப்படுவார்’’ என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த மக்கள்,
‘சிறை பூட்டுகள் உடையும், ஹேமந்த் சோரன் விடுவிக்கப்படுவார்’ என ஆரவாரமாக கோஷமிட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link