News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழர்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வேட்டி, சட்டை அணிந்து, முதல்வர் விஜய் பவ்யமாக இறைவனை கைகூப்பி வணங்கி விட்டு, மலர் தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதையடுத்து மேட்டூர் டேம் போட்டோ லைப்ரரியில்  வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்டார். மின்சாரநிலையத்தையும் பார்வையிட்டார்.

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம் போதிய நீர் கையிருப்பு இல்லை என்பதால் இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவிட்ட நிலையிலும் கர்நாடகாவில் கனமழை பெய்ததாலும் காவிரி நீர் கொஞ்சம் திறந்துவிடப்பட்டது.

இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிய நிலையில் காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார்.

அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த புகைப்படம் நாடெங்கும் வைரலாகிவருகிறது. கடைமடை வரை தண்ணீர் செல்லவேண்டும் என்றால் மேட்டூர் டேமுக்கு போதிய தண்ணீர் வரவேண்டும். விஜய் ராசிக்கு மழை பெய்து விவசாயிகளுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள், பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link