News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அண்ணாமலை வெளியிட்டது போலி ஆவணமா..? சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நேரத்தில் திடீரென அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆவணத்தை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்ஹார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமித்ஷா என்று அத்தனை பேரும் தி.மு.க. மீது குற்றம் சாட்டினார்கள். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த ஆவணம் பொய்யான ஒன்று தெரியவரவே, அண்ணாமலைக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் […]

நீதிபதியிடம் கதறிய சவுக்கு சங்கர்

கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை நாங்கள் தாக்கவில்லை என்று காவல் துறை கூறிய நிலையில், மதுரை நீதிமன்றத்துக்கு அவர் ஆஜராக வந்த நேரத்தில் கையில் கட்டு போட்டிருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5ம் தேதி கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் காரில் சோதனையிட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து […]

ஜெயிலுக்குள் சவுக்கு சங்கர் கையை உடைச்சிட்டாங்க – வழக்கறிஞர் அதிர்ச்சி குற்றச்சாட்டு

கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருக்கிறது, பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சவுக்கு சங்கரை பைப்பினால் அடித்து துன்புறுத்தி கையை உடைத்திருக்கிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் பேட்டி கொடுத்திருக்கிறார். வழக்கறிஞர் பேசுகையில், ‘’நீதிமன்ற பாதுகாப்பில் இருக்கும் போதே அவருக்குப் பாதுகாப்பு இல்லை. அடுத்து காவல் துறை கஸ்டடிக்குப் போகும் பட்சத்தில் அவருக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? எனவே ஜெயில் சூப்பிரண்டெண்ட் மற்றும் பத்து ஜெயில் வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்திற்குப் போகிறோம். […]

சவுக்கு சங்கர் மீது கஞ்சா உள்ளிட்ட புதுப்புது வழக்குகள். எடப்பாடி பழனிசாமி நோ கமென்ட்ஸ்

காவல் துறை அதிகாரிகள் குறித்தும் பெண் அதிகாரிகள் குறித்தும் அவதூறு பேசியதாக பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. சவுக்கு சங்கர் கைது தொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் பாக்கியம் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, “வழக்கு விசாரணைக்காக கைது செய்ய வந்த கோவை போலீசாருடன் சம்பவ இடத்தில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த […]

அப்பா ரேவண்ணாவை தூக்கிய போலீஸ்… மகன் பிரஜ்வல் கைது எப்போது..?

இந்தியாவை உலுக்கும் வகையில் கர்நாடகத்தின் ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் செக்ஸ் பாலியல் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளன. இதற்கு அவரது தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் ம.ஜ.த. எம்எல்ஏவுமான ரேவண்ணா மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென ரேவண்ணாவி போலீஸ் கைது செய்திருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் ம.ஜ.த.வின் மூத்த தலைவருமான‌ ரேவண்ணா கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் […]

எடப்பாடி பழனிசாமி ஆதரவு காட்டியதால் சவுக்கு கைது..?

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், மு.க.ஸ்டாலின், உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசகராக சவுக்கு சங்கர் செயல்படுவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சவுக்கு டீமை சேர்ந்த கார்த்திக் கோவிந்தராஜனை போலீஸ் கைது செய்தது. இதையடுத்து டீமில் உள்ள மற்றவர்கள் மீது விசாரணையும் தேடுதல் வேட்டையும் நடக்கிறது. கார்த்திக்கை வெளியே எடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்களே […]

வீராங்கனைகளின் பாலியல் வில்லனுக்கு சீட் இல்லை, மகனுக்கு உண்டு. பா.ஜ.க. தந்திரம்

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பா.ஜ.க.வின் பிரிஜ் பூஷனுக்கு இந்த முறை பா.ஜ.க.வில் சீட் கிடைக்காது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரது மகனுக்கு சீட் கொடுத்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப் பிரதேசம் – கைசர்கஞ்ச் தொகுதி மக்களவை உறுப்பினராக 3 முறை வெற்றி பெற்ற பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரினார்கள். ஆனால், பா.ஜ.க. இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலக அளவில் […]

கனிமொழி, ஆ.ராசா கிரேட் எஸ்கேப்…

மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தொடர்புடைய 2 ஜி வழக்கை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. 2ஜி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நேற்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. “2ஜி தீர்ப்பில் தெளிவு கோரும் போர்வையில் அதில் திருத்த செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த […]

அயோத்தியில் குடியரசுத் தலைவர் முர்மு. செட்டப் ராமர் சிலை சர்ச்சை

நாடாளுமன்றத் திறப்பு விழாவிலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்கவில்லை. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலே திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது. தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த விவகாரம் சர்ச்சை ஆகிவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, திடீரென திரெளபதி முர்மு அயோத்தியில் தரிசனம் செய்திருக்கிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அயோத்தி சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, கவர்னர் ஆனந்திபென் பட்டேல், உத்தர பிரதேச […]

நிர்மலா தேவி குற்றவாளி என்றால், யாருக்காக குற்றம் செய்தார்.?

ஒரு காலத்தில் தமிழகத்தையே உலுக்கிய நிர்மலா தேவி செக்ஸ் குற்றச்சாட்டு வழக்கில், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர்கல்வித்துறையிலும் பெரும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல்ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றதாகப் புகார் எழுந்தது. அதன்படி, பேராசிரியை […]