News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சவுக்கு சங்கர் விவகாரத்தில் மாஜி அ.தி.மு.க. அமைச்சருக்கு சிக்கல்..?

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சமூகவலைதளங்களில் அ.தி.மு.க.வினரே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க. வழக்கறிஞர்களே சவுக்கு சங்கர் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியே வருவதற்கு உதவி செய்து வருகிறார்கள். இதற்கு என்ன பின்னணி என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மூன்று விஷயங்களில் அ.தி.மு.க.வுடன் சவுக்கு சங்கர் கூட்டணி வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் முதலாவது, ஓ.பன்னீர்செல்வம் மீது அளவுக்கு அதிகமாக விமர்சனம் செய்து அவரை அரசியல் கோமாளியாக மாற்ற வேண்டும் என்ற விவகாரம். இதனை […]

விஜய், த்ரிஷாவுக்கு போதைப் பொருள் பரிசோதனை..?

சினிமா நட்சத்திரங்கள் பங்குகொள்ளும் பார்ட்டிகளில் எல்லாம் கொக்கைன் சப்ளை செய்யப்படுகிறது என்று பாடகியும் நடிகையுமான சுசித்ரா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் விஜய், த்ரிஷா ஆகியோருக்கு போதைப் போதைப்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி கோரிக்கை வைத்திருப்பது கடும் அதிர்வு ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வீரலட்சுமி, ‘’போதைப்பொருளின் தீமைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை […]

எடப்பாடி பழனிசாமியை காட்டிக் கொடுப்பாரா சவுக்கு சங்கர்..?

பெண் போலீஸாரை ஆபாசமாக பேசியதில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக பல வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு அவரது வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் எல்லாம் ரெய்டு நடந்திருக்கிறது. இந்த நிலையில் சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் காவலில் விசாரிக்க, சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் […]

சவுக்கு சங்கருக்கு காலை உடைக்கப் போறாங்க?

காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்து விமர்சனம் செய்ததற்காக வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார். வழக்கு மேல் வழக்கு என பல ஊர்களில் தொடுக்கப்பட்டதால் குண்டர் சட்டத்தில் போடப்பட்டார். திருச்சி முசிறி டிஎஸ்பி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், கோவை சிறையிலிருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு ஆஜராக போலீசார் அழைத்து வந்தனர். பெண் காவலர்கள் புடை சூழ வேனில் அழைத்துவரப் பட்டார் சவுக்கு சங்கர். இது குறித்து நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர், […]

ரஞ்சிதாவைப் பார்க்க கைலாசாவுக்கு இ-விசா. நித்தி அழைப்பு

நாட்டில் தேர்தல் களேபரம் நடந்துகொண்டிருக்கிறது. விலைவாசி எகிறிக்கொண்டு இருக்கிறது. இந்த அதகளத்துக்கு நடுவிலும் குஜாலாக இருப்பது எப்போதும் நித்தியானந்தா மட்டும் தான். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும், செத்துப்போனதாகவும் அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா மீண்டும் இப்போது லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். அது மட்டுமின்றி எங்கே இருக்கிறது என்றே தெரியாத கைலாசாவுக்கு வரச்சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில், ‘உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சயமான நிரந்தரமான தீர்வுகளை பெற, கைலாஸாவின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளிக்கும் […]

விடுதலைப்புலிகள் தடை நீட்டிப்புக்கு எதிராக சீமான் போராட்டம்..?

சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ், யானை வழித்தடம் என்று சகல விஷயங்களுக்கும் குரல் கொடுத்துவரும் நாம் தமிழர் சீமான், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிப்புக்கு எதிராக எப்போது போராட்டம் நடத்துவார் என்று தம்பிகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் எல்டிடிஈ எனப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஒன்றிய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக  உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இந்தியா முழுவதும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றன. எல்டிடிஈ அமைப்பின் […]

சீமானை கைது செய்ய முடியுமா, அவர் கையை உடைக்க முடியுமா? சாட்டை துரைமுருகன் சவால்

சவுக்கு சங்கரை சிறையில் தள்ளியிருக்கிறார்கள், கையை உடைத்திருக்கிறார்கள். இது எல்லாமே அவர் பொய்யான செய்தியை பரப்பியதால் நடந்திருக்கிறது. அது போல் அண்ணன் சீமானை கைது செய்ய முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார் சாட்டை துரைமுருகன். சவுக்கு சங்கர் கைதுக்கு ஆதரவாக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கும் சாட்டை துரைமுருகன், ‘சவுக்கு சங்கரை பார்த்து எல்லோரும் பயப்படுறாங்கன்னு சொன்னார். அவரைப் பார்த்துப் பயந்தா கையை உடைக்க முடியுமா? அண்ணன் சீமான் இருக்கிறார். அவர் மீது தொடர்ச்சியா எத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. […]

டெல்லியில் ஃபெலிக்ஸை தூக்கிட்டாங்க.. அடுத்தது இவர்தானா..?

சவுக்கு சங்கரின் கூட்டாளி என்று கருதப்படும் ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸை போலீஸார் டெல்லியில் கைது செய்திருக்கிறார்கள். இதையடுத்து சவுக்குக்கு நெருக்கமான மற்றும் ஒரு நபரும் கைது செய்யப்பட இருப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த 2022ல் கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது அரசியலில் இருக்கும் பெண்கள் அனைவரும் அட்ஜஸ்ட் செய்து வந்தவர்களே என்று பேசியதற்காக ஃபெலிக்ஸ் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி வெளியில் இருந்தார் ஜெரால்ட் பெலிக்ஸ். […]

ஆயிரம் வழக்கு வாங்கும் அபூர்வ சங்கர்… ரெய்டில் ஆபாச வீடியோ சிக்கியதா?

தி.மு.க. அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவு படுத்திய விவகாரத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதைப் பார்க்கும் போது ஆயிரம் வழக்குகள் பதிவாகும் போல் தெரிகிறது. இந்த விவகாரத்தையொட்டி சவுக்கு சங்கர் அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர் ராஜரத்தினம் வீட்டிலும் நடந்த ரெய்டில் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் […]

பட்டாசு ஆலையில் 10 பேர் பலி. நிரந்தரத் தீர்வுக்கு இதுவே வழி.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் ஏழு அறைகள் தரைமட்டமாகி இருக்கின்றனது. மேலும் படு காயமடைந்த பலருக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிவகாசி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், சுமார் 1087 பட்டாசு ஆலைகளும், 2963 பட்டாசு கடைகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இவ்வாறு இயங்கி […]