News

Follow Us

துப்பாக்கி முனையில் ரேவண்ணா செய்த பாலியல் பலாத்காரம்

பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் குற்ற வழக்கில் தினம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இந்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரதமர் மோடி இதுவரையிலும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. பிரஜ்வெல் ரேவன்னா, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகௌடாவின் பேரன் ஆவார். இவர் தற்போது கர்நாடகாவின் ஹசான் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் ஆவாபிரஜ்வெல் பாலியல் ரீதியாக பல பெண்களிடம் அத்துமீறியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் […]

பிரிஜ் பூஷன் மகனுக்கு எதிராக சாக்‌ஷி மாலிக் தேர்தல் பிரசாரம்

இந்தியாவுக்காக மல்யுத்தப் போட்டியில் வென்று பரிசு வாங்கி ஆனந்தக் கண்ணீர் விட்ட சாக்‌ஷி மாலிக், அதன்பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் விளைவாக நாள் தோறும் கண்ணீர் சிந்த வேண்டியதாயிற்று. பல நாட்கள் போராட்டம் நடத்தியும் அவர்களுடைய கோரிக்கை பரிசீலனை செய்யப்படவில்லை. இந்த நிலையில், அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதைக் காட்டும் வகையில் பிரிஜ் பூஷனுக்குப் பதிலாக அவரது மகனுக்குப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாக்‌ஷி மாலிக், “நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை […]

எடப்பாடி பழனிசாமி ஆதரவு காட்டியதால் சவுக்கு கைது..?

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், மு.க.ஸ்டாலின், உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசகராக சவுக்கு சங்கர் செயல்படுவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சவுக்கு டீமை சேர்ந்த கார்த்திக் கோவிந்தராஜனை போலீஸ் கைது செய்தது. இதையடுத்து டீமில் உள்ள மற்றவர்கள் மீது விசாரணையும் தேடுதல் வேட்டையும் நடக்கிறது. கார்த்திக்கை வெளியே எடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்களே […]

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனுக்கு கொம்பு சீவும் பா.ஜ.க.

தேர்தலில் ஒரே ஒரு சீட் கூட கிடைக்காது என்பதில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இப்போதே தெளிவுக்கு வந்துவிட்டார்களாம். அதனால், அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் அதன்பிறகு அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து தி.மு.க.வை எதிர்த்து நிற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த உடன்பாட்டுக்கு இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லையாம். எடப்பாடி பழனிசாமி இப்படியே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தால் அ.தி.மு.க.வில் இருந்து மூத்த தலைவர்களை எல்லாம் இழுத்துவந்து பா.ஜ.க.வில் சேர்ப்பதற்கு […]

வீராங்கனைகளின் பாலியல் வில்லனுக்கு சீட் இல்லை, மகனுக்கு உண்டு. பா.ஜ.க. தந்திரம்

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பா.ஜ.க.வின் பிரிஜ் பூஷனுக்கு இந்த முறை பா.ஜ.க.வில் சீட் கிடைக்காது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரது மகனுக்கு சீட் கொடுத்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப் பிரதேசம் – கைசர்கஞ்ச் தொகுதி மக்களவை உறுப்பினராக 3 முறை வெற்றி பெற்ற பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரினார்கள். ஆனால், பா.ஜ.க. இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலக அளவில் […]

கனிமொழி, ஆ.ராசா கிரேட் எஸ்கேப்…

மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தொடர்புடைய 2 ஜி வழக்கை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. 2ஜி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நேற்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. “2ஜி தீர்ப்பில் தெளிவு கோரும் போர்வையில் அதில் திருத்த செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த […]

ராகுலுக்கு ரேபரேலி, பிரியங்காவுக்கு சீட் இல்லை..!

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ரேபரேலி தொகுதி வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி தேர்தலில் நிற்கவில்லை. அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா வேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இன்றே வேட்புமனு தாக்கல் செய்கிறார். உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு, காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். அமேதியில் […]

அயோத்தியில் குடியரசுத் தலைவர் முர்மு. செட்டப் ராமர் சிலை சர்ச்சை

நாடாளுமன்றத் திறப்பு விழாவிலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்கவில்லை. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலே திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது. தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த விவகாரம் சர்ச்சை ஆகிவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, திடீரென திரெளபதி முர்மு அயோத்தியில் தரிசனம் செய்திருக்கிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அயோத்தி சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, கவர்னர் ஆனந்திபென் பட்டேல், உத்தர பிரதேச […]

மோடியின் சவாலை ஏற்று உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா போட்டி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேட்பாளராக நிற்பதற்கு ராகுல் காந்திக்குத் தைரியம் இல்லை என்று பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடி கொடுப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா வத்ராவும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய மாநிலமாக இருந்தது உபி. இதில் தற்போது அவர்களுக்கு மிஞ்சியிருப்பது ரேபரேலி தொகுதி மட்டுமே. இத்துடன் கைவசம் இருந்த அமேதியை கடந்த 2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி […]

கங்கை அமரனுக்கு சனாதனத் திமிர்… வைரமுத்து ஆதரவாளர்கள் கும்மாங்குத்து

பாடலுக்கு இசையா, இசைக்குப் பாட்டா என்று பேசியிருந்த வைரமுத்துக்கு எதிராக இளையராஜாவின் தம்பி கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர், ’நாங்க கொடுத்த பிச்சைதான் வைரமுத்துவோட வாழ்க்கை!.. இப்படியெல்லாம் பேசுனா அவ்வளவுதான்!.. நான் ஒரே ஒரு தம்பி தான்.. என்ன நடக்கும்னே தெரியாது. வைரமுத்து நல்ல மனிதர் இல்லை… புத்தியும் இல்லை. வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிடுச்சு… என்றெல்லாம் விளாசியிருந்தார். நாங்க வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்து ஜீரோ என்று கூறியிருந்ததற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பஞ்சு அருணாசலம் வாய்ப்பு […]