பிரதான சாலைக்கு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயர்! முதலமைச்சருக்கு நன்றி!

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாண்டலின் ஸ்ரீநிவாசின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மாண்டலின் இசைக்கலைஞரான மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலக்கோல் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் ஆசிரியரான ருத்ரராஜூ சுப்பாராஜூ மாண்டலின் ஸ்ரீநிவாசனுக்கு மாண்டலின் இசைக்கருவியை வாசிக்க பயிற்சி அளித்தார். 1969ம் ஆண்டு பிறந்த உலகப்புகழ் வாய்ந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் 2014ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி உடல்நலக் […]
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருப்பதி பிரம்மோற்சவம்! திரளான பக்தர்கள் கூட்டம்!

திருப்பதி பிரம்மோற்சவம் நேற்று (செப்.18ம் தேதி) தொடங்கிய நிலையில் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். திருமலை திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் படைக்கும் கடவுளான பிரம்மதேவனை அழைத்து உலகநன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த உத்தரவிட்டதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்ற பிரம்ம தேவன், புரட்டாசி மாதத்தில் திருவோணநட்சத்திரம் அன்று நிறைவு பெறும் வகையில் தொடர்ந்து 9 நாட்கள் உற்சவத்தை நடத்தியதால் இதற்கு பிரம்மோற்சவம் என்று […]
கனடா தூதர் வெளியேற 5 நாட்கள் கெடு! கனடாவுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு!

அடுத்த 5 நாட்களுக்குள் கனடா தூதரக அதிகாரி இந்தியா¬ விட்டு வெளியேற வேண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜிப் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது உலக அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து மூத்த அதிகாரியை வெளியேற்றி கனடா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது கனடா பிரதமர் […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா! உங்களுக்கான உதவி மையம் தொடக்கம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தவர்களில் 56 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களுக்கான சேவை மையங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பிக்க பெண்கள் வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அதே போல் அரசு ஊழியர்களாக இருக்கக் கூடாது, ஆண்டுக்கு 3600 யூனிட்டுகள் மின்கட்டணம் செலுத்தக் கூடாது. மேலும் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் […]
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி: செல்வப்பெருந்தகைக்கு வாய்ப்பு!

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகைக்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்வியும் மேலோங்கியுள்ளது இது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா, ராகுல் ஆகியோர் நேற்று முன்தினம் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று இரவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லியில் இருந்து வெளியிடப்படலாம் […]
சென்னை 59வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் காலமானார்! முக்கிய பின்னணி!

சென்னை மாநகராட்சியின் 59வது வார்டு தி.மு.க. மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. 153 வார்டுகளிலும், அ.தி.மு.க. 15 வார்டுகளிலும், காங்கிரஸ் 13 வார்டுகளிலும், சி.பி.எம். மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 4 வார்டுகளிலும் உறுப்பினர்களை பெற்றுள்ளன. ஏற்கனவே 122வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான ஷிபா வாசு, காங்கிரஸ் கவுன்சிலரான 165வது வார்டு கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் மற்றும் […]
காவிரியில் போதுமான நீர் இருந்தும் தண்ணீர் தர மறுப்பு! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

காவிரியில் போதுமான நீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி விவகாரம் எந்த தலைமுறையில்தான் விடிவுக்கு வரும் என்பது பொதுமக்களின் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் காவிரி நீர் குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுடெல்லியில் தமிழக […]
எங்கு நடந்தாலும் சாதிய தீண்டாமை தவறுதான்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

சென்னையில் நடந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்கான கருத்துகணிப்பு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாதியை ஒழிக்க நாங்கள் போராடி வருகிறோம் என்று தெரிவித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பொதுமக்களிடம் கருத்துக் கணிப்புக்கான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்காக […]
பயிற்சி முடித்த 3 பெண் அர்ச்சகர்கள்! நிதி உதவி அளித்து வாழ்த்திய அமைச்சர் உதயநிதி!

அர்ச்சகர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 3 பெண் அர்ச்சகர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் நிதி உதவித் தொகை வழங்கியுள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘’அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, நம் மாண்புமிகு முதலமைச்சரையே சேரும். சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய […]
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை! வெளியான காரணம்!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டிஷ்யூம், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து விஜய் ஆண்டனி மற்ற இசையமைப்பாளர்களுக்கு கடும் போட்டியாளராக இருந்து வருகிறார். இசையமைப்பதோடு சேர்த்து காளி, நான், சைத்தான், சலீம், பிச்சைக்காரன்1, பிச்சைக்காரன்2, கொலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னை ஒரு கதாநாயகனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். விஜய் […]

