News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

சம ஊதியம் வாக்குறுதியை மறக்கலாமா ஸ்டாலின்..? மூன்றாவது நாளாக ஆசிரியர் போராட்டம்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சம ஊதியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடித்தது.  இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடக்குமுறையில் கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு நிலவியது. ஏன் இந்த போராட்டம் சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் மூன்றாவது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். அதாவது 2009 மே 31-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 11,700 ரூபாய் ஊதியம் பெற்று வந்தனர். […]

சோழிங்கநல்லூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன்..? இபிஎஸ் சூசக அறிவிப்பு

நேற்றைய தினம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதோடு அவர் இபிஎஸ்க்கு தங்க முலாம் பூசப்பட செங்கோல் வழங்கினார். இதையடுத்து இந்த தொகுதியில் தமிழிசை நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ் கடந்த 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். ஆறாவது கட்டமாக நேற்று திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில் எழுச்சியுரை […]

காங்கிரஸ் கட்சியை உடைக்குமா திமுக..? கூட்டணி ஆட்சி கோஷம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினரை கோபமூட்டியுள்ளது. கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோற்றூப்போன 7 தொகுதிகளிலும் காங்கிரசை அதிமுக வெற்றி வென்றது. ஆகவே, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் கொடுத்தால் போதும் என்று திமுக […]

பெரியாருக்கும் சீமானுக்கும்தான் போட்டி…! திருமாவுக்கும் அட்டாக்

வரும் 2026 தேர்தலில் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி என்பது போன்று ஒவ்வொரு மேடையிலும் பேசிவருகிறார் நடிகர் விஜய். அதே பாணியில் இப்போது பெரியாருக்கும் சீமானுக்கும் போட்டி என்று நாம் தமிழர் பொதுக்குழுவில் பேசியது பரபரப்பாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய  சீமான், ‘’எங்களுக்குத் தேவை இலவசப் பேருந்து பயணம் அல்ல… உலகத் தரமான இலவசக் கல்வி! சாராயம் விற்பது அரசு வேலையா? ஆடு மாடு மேய்த்து பால் விற்பது அரசு […]

மலேசியாவில் விஜய் ரிகார்டு பிரேக். அடுத்து ஜல்லிக்கட்டு போட்டி..?

மலேசியாவில் பிரமாண்டமான இசை விழா நடத்திக் காட்டிய விஜய் அடுத்து தைப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு நடந்துவரும் ஏற்பாடுகள், அவரது கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. சினிமா இசை வெளியீட்டு விழாவிற்கு வெளிநாட்டில் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் கலந்துகொண்ட விஜய் நிகழ்ச்சி, ‘மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனையாகப் பதிவு செய்யபட்டு, இதற்கான சான்றிதழ் மேடையிலேயே விஜய்யிடம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யைக் கட்டி அணைக்க வேண்டும் போல இருக்கிறது […]

மீண்டும் கைது செய்யப்படுவாரா சவுக்கு சங்கர்..? நீதிமன்றத்துடன் மோதும் திமுக

நீதிமன்றத்துடன் ஆளும் திமுக தொடர்ந்து மோதிக்கொண்டு இருக்கிறது. செந்தில்பாலாஜி விவகாரம், மணல் கொள்ளை, டிஜிபி நியமனம் என்று எல்லா விஷயங்களிலும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து மல்லுக்கட்டுகிறது. இதே வழியில் சவுக்கு சங்கர் கைதுக்கும் நீதிமன்றத்தில் மோதுவதற்கு தயாராவதாகத் தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வழக்கு விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கொடுத்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது உள்ள எல்லா […]

குத்துவிளக்குக்குப் பதிலாக பறையிசை. கனிமொழியை கடிக்கும் இந்து அமைப்புகள்.

சனாதனம் பேசி இந்துக்களை உதயநிதி ஸ்டாலின் வம்புக்கு இழுத்தார். இதற்கான வழக்கு இன்னமும் நடந்துவருகிறது. இந்த நிலையில் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கவேண்டிய நிகழ்ச்சியை கனிமொழி, பறை இசை அடித்து தொடங்கியது வில்லங்கமாகிவருகிறது. நேற்றைய தினம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நேற்று சென்னை – முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற நாடக விழாவில் பங்கேற்ற கனிமொழி பறையிசை அடித்து தொடங்கிவைத்தார். அதோடு, ’நம்ம கலை வடிவங்களை பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள்; பறையைக் கூட […]

மலேசியாவில் விஜய்க்கு செம வசூல். அஜிதாவுக்கு பனையூர் அழைப்பு.

விஜய் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் விஜய்யுடன் நடிகர் தனுஷ், பிரபுதேவா, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் ஜனநாயகன் மீது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் […]

பிரேமலதா சாபம் பலிக்குமா..? கட்சி ஒண்ணு பேரம் மூணு

பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சந்திப்பு நடந்தபிறகு அதிமுகவில் இருந்து தொகுதிப் பங்கீடு என்று எண்ணிக்கை பரவியது. தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையைக் கண்டு பிரேமலதா கொதித்துப் போய் சாபம் கொடுத்திருக்கிறார்.   அதிமுக தரப்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு என்று ஒரு பட்டியல் வெளியானது. அதில்  அதிமுகவுக்கு 170 தொகுதிகள், பாஜகவுக்கு 23 தொகுதிகள், பாமவுக்கு 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், அமமுகவுக்கு 6 தொகுதிகள், ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள், […]

தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம், மருத்துவமனையில் கஞ்சா செடி. ஸ்டாலின் ஆட்சிக்கு சபாஷ்

தினமும் ஒரு திட்டத்தைத் தொடங்கிவைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்குத் தூக்கமே வராது. அந்த வகையில் அரசு மருத்துவமனை தோறும் கஞ்சா செடி வளர்க்கும் திட்டம், தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் வழங்கும் திட்டங்களைத் தொடங்கியிருக்கிறாரா ஸ்டாலின் என்று கேள்வி எழுந்துள்ளது.   மயிலாப்பூரில் வனிதா என்ற பெண், தனது, வீட்டில் தண்ணீர் கேன் விநியோகம் செய்வது போல், கள்ளச்சாரயத்தையும் விற்பனை செய்து வந்த தகவல் நேற்று வெளியானது. அவர் ,தண்ணீர் கேன் போடுவதுபோல் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த‌து தெரிய […]