காங்கிரஸ் கூட்டணி கலாட்டா அதகளம்.. வேடிக்கை பார்க்கும் ராகுல்

தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் தலைவர்கள் உயிரோடு இருப்பதைக் காட்டும் வகையில் அடிதடி பஞ்சாயத்தில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் நேறைய தினம் மட்டும் இரண்டு ரகளை நடந்துள்ளது. தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசலால் கட்சி அழிவுப்பாதையில் சென்று வருவதாக ஜோதிமணி எம்.பி வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டி விட்டார். அதேபோன்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான சூர்ய பிரகாசம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து சூர்ய பிரகாசம், […]
விஜய் ஜனநாயகனுக்கு சென்சார் தடை..? வில்லிவாக்கம் எம்ஜிஆரை தூக்கிட்டாங்க.

விஜய் கட்சியில் அனுபவமிக்க அரசியல்வாதிகள் யாருமே இல்லை என்ற குறையைத் தீர்ப்பதற்காக செங்கோட்டையனைக் கொண்டுவந்தார்கள். அடுத்து நாஞ்சில் சம்பத் வந்தார். இப்போது ஓபிஎஸ் கூடாரத்திலிருந்து ஜேசிடி பிரபாகரை கட்சியில் இணைத்துள்ளனர். ஜேசிடி பிரபாகரை வில்லிவாக்கம் எம்ஜிஆர் என்று சொல்வதுண்டு. வில்லிவாக்கம் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர், அவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது கட்சிக்கு நல்லது, சென்னைக்கு ஒரு வேட்பாளர் ரெடி என்கிறார்கள். அதேநேரம், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் இன்னமும் […]
82 வயதில் வைகோ நடைபயணம்… 8 சீட்டு கொடுப்பாரா ஸ்டாலின்?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியியில் இன்று நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். 82 வயதில் வைகோ மேற்கொள்ளும் 8வது நடைபயணம் என்பது குறிப்பிட்டத்தக்கது முதல்வர் ஸ்டாலின் இந்த நடைப்பயணத்தை தொடங்கிவைத்தார். இன்று முதல் 12-ம் தேதி வரையிலான இந்த நடைப்பயணத்தில் வைகோவுடன் 950 பேர் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் அதிகரித்து வரும் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சமத்துவ நடைப்பயணத்தை நடத்துவதாக வைகோ கூறினாலும், திமுக கூட்டணியில் இரட்டை இலக்க எண்களில் சீட்களை […]
ஸ்டாலின் மானத்தை கப்பலேற்றிய ஜெயரஞ்சன். போட்டு வெளுக்குறாங்கப்பா…

தமிழக அரசு எவ்வளவு கடன் வாங்குனா உங்களுக்கு என்ன… உங்க சட்டையை புடிச்சு கேட்க போறாங்களா..? உங்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்ன சம்பந்தம்? என்று ஒரே ஒரு பேட்டியில் எக்குத்தப்பாகப் பேசி ஸ்டாலின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிட்டார் ஜெயரஞ்சன். இவரெலாம் பொருளாதார அறிஞரா என்று சமூகவலைதளத்தில் போட்டுத் தாக்குகிறார்கள். ஜெயரஞ்சனை பொருளாதாரப் புலி என்று நினைத்து விலை கொடுத்து வாங்கிய திமுக இப்போது அதற்கான பலனை அனுபவிக்கிறது என்கிறார்கள். அரசு வாங்கும் கடனுக்கும் மக்களுக்கும் சம்பந்தமே இல்லை […]
அமித் ஷா வேட்டை ஆரம்பம்…. ஓபிஎஸ் வெயிட்டிங்… இபிஎஸ் எஸ்கேப்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 4ம் தேதி புதுக்கோட்டைக்கு வருவதை ஓ.பன்னீர்செல்வம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார். அதேநேரம், இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை பொங்கலுக்குப் பிறகே தொடர நினைக்கிறார். எனவே, அமித் ஷா பயணம் பயன் தருவது உறுதியில்லை என்றே தெரிகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற யாத்திரைக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் நிறைவு விழாவில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் […]
கூட்டணிக்கு மாணிக்கம் தாகூர் வேட்டு. திமுக ரெட் நோட்டீஸ்..?

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் சிறப்பாக உள்ளது. திமுக ஆளும் தமிழ்நாடு மோசமாக உள்ளது என்று சொன்ன காங்கிரஸ் பிரவீன் சக்கரவத்திக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்த மாணிக்கம் தாகூரை திமுக ரெட் மார்க் செய்துள்ளது. விஜய் கூட்டணிக்காக திமுக கூட்டணியை உடைக்கப் பார்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர், ‘’காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? […]
பொங்கலுக்கு ஸ்டாலின் அல்வா…? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தைப் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதற்கிடையில், பொங்கல் பரிசை 5 ஆயிரமாகத் தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டி கேட்கத் தொடங்கியும் இருக்கிறார்கள். இந்நிலையில் ரொக்கப்பரிசு பற்றிய தகவல் இல்லாமல் பொங்கல் தொகுப்பு மட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முழு […]
தைப் பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய்..? அதிமுக போஸ்டர் அதிரடி

அதிமுக ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக் மூட வேண்டும் என்று ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, ‘தைப் பொங்கலுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்று போர்க்கொடி எழுப்பினார். இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், திமுக அரசு பொங்கல் பரிசு பணம் கொடுப்பது குறித்து இன்னமும் வாய் திறக்கவே இல்லை. கப்சிப் என்று அமைதியாக இருக்கிறது. ஸ்டாலின் வைத்த வேண்டுகோளை இப்போது அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது […]
ஒரே நாளில் வெட்டுப்பட்டவர் டிஸ்சார்ஜ்… இது திராவிட மாடலா ஸ்டாலின்..?

திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் காட்டுத்தனமாக வெட்டுப்பட்ட வடமாநில இளைஞர் சிராஜ் ஒரே நாள்ல டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசின் சிகிச்சை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டாரா அல்லது போலீஸ் தரப்பில் அழுத்தம் கொடுத்து அனுப்பப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுகவினர், ‘’திருத்தணியில் 17 வயது கஞ்சா போதைச் சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் சூரஜ், சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக திமுக […]
பெருகும் ரீல்ஸ் ரவுடிகள்… போதை அரசு என்ன செய்யவேண்டும்..?

கையில் அரிவாள், கத்தியைத் தூக்குவதற்கே சிறுவர்கள் அச்சப்பட்ட காலம் போயே விட்டது. பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கே பட்டாக்கத்தியைக் கையில் எடுக்கிறார்கள். இப்போது 18 வயதை கூட ஆகாத டிபன் பாக்ஸ் ஹேர் கட்டிங் புள்ளீங்கோ எல்லாம் பைக்கில் ட்ரிபிள்ஸ் செல்கின்றன. ஹெல்மெட் போடுவதில்லை. பொதுமக்களை அச்சுறுத்தும்படி அதீத ஹாரன் ஒலி எழுப்பி வேகமாக வண்டி ஓட்டுகின்றன. இந்த மைனர் குஞ்சுகள்தான் கும்பலாக சேர்ந்து ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அரிவாள்களை தூக்கி வெட்டும் அளவுக்கு வளர்ந்து […]

