News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திமுகவில், கட்சி மாறி வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், உடனியாக மாநிலப் பதவி கிடையாது என்ற கட்டுப்பாட்டை பன்னீருக்காக ஸ்டாலின் மீறப்போவதாக பேச்சு எழுந்துள்ளது.

ஏனென்றால், முதல்வர் விஜய் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்த நிற்க வேண்டும் என்ற குரல் எழுந்த போதும், எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிடும் போதும், சட்டமன்றத்தின் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு மாறாக நடைபெறும் எந்தவொரு விவாதத்தின் போதும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவான வாதங்களை முன்வைக்கும் போதும் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் ஸ்டாலினை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம்.

இதுகுறித்துப் பேசும் பன்னீரின் ஆதரவாளர்கள், ‘’ஏற்றுக்கொண்ட தலைமைக்கு என்றைக்குமே பன்னீர் விசுவாசமாகத்தான் இருந்து வந்துள்ளார். தற்போது அதிமுகவிலிருந்து திமுகவில் அவர் இணைந்த போதும், தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுக்கு திமுக தலைமை சீட்டு வழங்காத போதும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கட்சி பதவி கூட வழங்காமல் இவ்வளவு நாட்கள் திமுக தலைமை இழுத்து வந்த போதும் அவர் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை.

ஓ பன்னீர்செல்வம் அவர்களது மகன் ரவீந்திரநாத் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வேண்டும் அவரை என்ற கட்டாயப்படுத்தி கூட அவர் அணி மாற விரும்பவில்லை. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தமிழக வெற்றிகழக தரப்பில் இருந்து தூண்டில் போட்டும் அதை அவர் ஏற்க மறுத்து விட்டார். இதற்கு முக்கிய காரணம் தான் கொண்ட தலைமை மீது விசுவாசமாக இருக்கிறார் என்பதுதான்.

தலைமைக்கு எதிராக செயல்படுவதோ தலைமை மீறி நடப்பதோ அவர் விரும்புவதில்லை. பதவி கிடைக்காத நிலையில் தற்போது வரை அவர் மௌனம் காத்து வருகிறார். இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவது தான் கொண்ட தலைமை மீது விசுவாசத்தை காட்டுகிறது’’ என்கிறார்கள்.

சட்டசபைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு பன்னீருக்கு வெகுமானம் கிடைக்கும் என்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link