News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

டிடிவி தினகரனை தோற்கடிப்பாரா மாணிக்கராஜா…? அமமுகவில் சலசலப்பு

இத்தனை காலம் டிடிவி தினகரனுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் மாணிக்கராஜா. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக மாணிக்கராஜா இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அவருடன் அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர். கடம்பூர் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவர். டிடிவி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகத் […]

விசிலு சத்தம் கேட்குதய்யா… குஷியில் விஜய் ரசிகர்கள்

ஜனநாயகன் படம் வெளியாகாத சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே பொதுச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விசில் சின்னம், கிரிக்கெட் பேட், ஆட்டோ ஆகியவற்றில் ஒன்று ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை […]

எடப்பாடி இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு விருந்து… பன்னீர், பிரேமலதா வெயிட்டிங்

நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயிலுக்கு தடபுடல் காலை விருந்து வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பிரதமர் மேடையில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தொகுதிப்பங்கீடு குறித்து அறிவிக்க விரும்புவதாக சொல்லப்பட்டாலும், அதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை. அதோடு பிரேமலதா, ராமதாஸ், பன்னீர் இல்லாமல் இதோடு கூட்டணியை முடித்துக்கொள்ளலாம் என்பது எடப்பாடியின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், இன்னும் சில கட்சிகளையும் இணைத்து மெகா […]

விஜய்க்கு விசில் சிக்கல்… பொதுச்சின்னம் டென்ஷனில் தவெக

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல், கரூர் வழக்கில் விசாரணை நெருக்கடி, தேர்தல் பிரசாரம் செய்ய வெளியே வருவதற்கு இடைஞ்சல் என்று விஜய்யின் தவெகவுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி இருக்கும் நிலையில், பொதுச்சின்னம் பெறுவதிலும் சிக்கல் இருப்பது தவெகவினரை அதிர வைத்துள்ளது. விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். அதாவது தேர்தல் கமிஷன் சின்னம் விஷயத்தில் விஜய்க்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம். விதிமுறைப்படி ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட கட்சியாக […]

மோடியிடம் சரண்டரான டிடிவி தினகரன்…. அடுத்தது சசிகலா..?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் வரை கூட்டணிக்குப் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்த டிடிவி தினகரன் இன்று எந்த நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘’அமமுகவுக்கு மாத்திரமல்ல தமிழ்நாட்டுக்கே நல்லதொரு ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அதில் நாங்களும் பங்கு பெறுவதற்காக மக்கள் விரும்புகிற ஒரு நல்லாட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக இப்போது நாங்கள் புறப்பட்டு செல்கிறோம். ஒண்ணே […]

அமைச்சர் நேருக்கு ஜெயில் ரெடி..? கைவிடுகிறாரா உதயநிதி..?

வரும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுகவின் முக்கியப் புள்ளிகளில் பலர் சிறையில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கூட்டங்களில் பேசிவருகிறார். அப்படி இபிஎஸ் பேசுவது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் அமலாக்கத்துறை நடவடிக்கை வேகமெடுத்துவருகிறது. இந்த நிலையில் நேரு கைதானால் அன்பில் மகேஸ்க்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று திமுகவே அமைதி காப்பாதாக ஒரு செய்தி வெளியாகிறது. அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை பணி நியமனத்தில் 888 கோடி ஊழல் என்று முதல் […]

வைத்திலிங்கத்தால் அரசியல் அனாதையான பன்னீர்…  சாமியாராகப் போகிறாரா..?

ஆதரவாளர்கள் எல்லோரும் வெளியேறிய பிறகும் தனக்கு வைத்திலிங்கம் துணையாக இருப்பார் என்று பன்னீர்செல்வம் மலை போல் நம்பிக்கொண்டு இருந்தார். அவரும் இன்று பன்னீருக்கு டாட்டா காட்டிவிட்டார். இதையடுத்து திமுகவுக்குப் போவதா அல்லது சாமியாராகிவிடுவதா என்று பன்னீர் யோசிப்பதாகத் தகவல். ஒரத்தநாடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இன்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார். அதிமுகவில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட […]

சிபிஐ விசாரணையில் திமுகவை போட்டுக் கொடுத்தாரா விஜய்..? திசை மாறும் வழக்கு

கரூர் விபத்து விவகாரத்தை விசாரணை செய்துவரும் சிபிஐ, நேற்று விசாரணக்கு ஆஜரான விஜய், இந்த விவகாரத்தில் அவர் மனதில் இருந்த சந்தேகங்களை கொட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி, இந்த வழக்கு தேர்தல் சமயத்தில் திசை மாறும் என்றும் சொல்லப்படுகிறது. நேற்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 12-ம் தேதி ஆஜரான நேரத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு […]

கவர்னர், எடப்பாடி வெளிநடப்பு. சட்டமன்றத்தில் திமுக அதகளம்

இன்று காலை தொடங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கவர்னரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்தை ஆளுனருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் காவல்துறை மரியாதை அளிக்கப்ப்பட்டது. கருணாநிதி புத்தகத்தைக் கொடுத்து சபாநாயகர் வரவேற்பு கொடுத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதேவகையில் இன்றைய கூட்டத்தொடரும் […]

விஜய் டெல்லியில் ஆஜர்… ஜான் ஆரோக்கியசாமிக்கு கைது ஆபத்து..?

  கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இந்நிலையில் விஜய் கட்சிக்கு வெளிநாட்டு நிதி பெற்ற வகையில் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு சிக்கல் எழ வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. தவெக தலைவரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் […]