விந்தியாவுக்கு கை கொடுக்க கார்த்திக் வந்தாச்சு… குஷியில் அ.தி.மு.க.

கடந்த தேர்தலில் எடப்பாடிக்கு ஆதரவாக பேசிவந்த செந்தில் இப்போது எதிர்முகாமில் பேசிக்கொண்டு இருக்கிறார். நட்சத்திரங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருவது நடிகை விந்தியா மட்டுமே. அவர் ஸ்டாலின், உதயநிதி என்று அத்தனை பேரையும் கடுமையாகத் தாக்கி பேசிவருகிறார். இப்போது அவருக்கு கை கொடுக்க நடிகர் கார்த்திக்கை கடைசி கட்டத்தில் இறக்கி விட்டுள்ளனர். தேர்தல் நேரங்களில் மட்டும் களத்தில் எட்டிப் பார்க்கும் கார்த்திக் அதன்பிறகு காணாமல் போய்விடுவார். ஒரு காலத்தில் தென் மாவட்டங்களில் கார்த்திக்குக்கு அமோக வரவேற்பு இருந்தது. […]
ஜெயலலிதாவின் ஆத்மா பன்னீருக்கு கொடுத்த தண்டனை… எடப்பாடி பழனிசாமி திகில் அட்டாக்

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது அட்டாக் செய்துவந்த எடப்பாடி பழனிசாமி திடீரென பன்னீர்செல்வம் மீது பாய்ந்திருக்கிறார். ஈரோட்டில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய விவகாரம் வைரலாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுகவை வீழ்த்த, திமுக தலைவர் எத்தனையோ அவதாரங்களை எடுத்துவிட்டார். திமுக எடுத்த அத்தனை அவதாரங்களையும் மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கிய கட்சி அதிமுக. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் […]
கனிமொழி ஆதரவாளருடன் மல்லுக்கட்டும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் – தென்காசியில் வெற்றி யாருக்கு

தி.மு.க.வின் சிட்டிங் எம்.பி.யான தனுஷ் எம்.குமாருக்குத்தான் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ராணி ஸ்ரீ குமார் என்ற புதுமுகத்துக்கு தென்காசியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வரும் ராணி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். இவ கனிமொழி ஆதரவாளர் என்ற ஒரே தகுதியில் சீட் வாங்கியிருக்கிறார். அதேநேரம் ராணி ஸ்ரீகுமார் பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின், பெரியப்பா பே.துரைராஜ், சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து ஏற்கெனவே இரண்டு முறை சட்டமன்ற […]
பெண்களுக்கு நிதி, மாணவர்களுக்கு செல்போன், நீட் விலக்கு… திராவிட மாடலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ஒட்டியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகியிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் வெளியிட்டனர். தேசிய அளவில் சாதிவாரி, சமூக – பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை […]
நடிகர் விஜய்க்கு டென்ஷன் தந்த அறிக்கைக்குக் காரணம் இந்த கட்சிக்காரங்களா..?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய் ஏற்கெனவே தெளிவாக அறிக்கை கொடுத்திருக்கும் நிலையில் திடீரென, ‘திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப் போட வேண்டாம்’ நடிகர் விஜய் கட்சியின் பெயரில் திடீரென ஒரு அறிக்கை இணையத்தில் வைரலாக வலம் வந்தது. இதனை உண்மை என்று நம்பி நிறைய விஜய் ரசிகர்கள் இதை சுற்றுக்கு விடத் தொடங்கினார்கள். அதேநேரம், ஒருசிலர் மட்டும் சந்தேகத்துடன் தலைமையைத் தொடர்புகொண்டார்கள். இதையடுத்தே ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரில் போலியாக […]
மோடி வர்றார்… அமித் ஷா ஓடுறார்… தேர்தல் பயணம் ரத்துக்கு காரணம் இதுதானா..?

எத்தனை தீவிரமாக சுற்றுப்பயணம் செய்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு சீட் கிடைக்கப்போவதில்லை எனவே, உத்தரப்பிரதேசம் போன்ற பகுதியில் கவனம் செலுத்தினால் நல்லது என்று உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்ததாகவும், இதையடுத்தே அமித் ஷா சுற்றுப்பயணம் ரத்து செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய வர இருக்கிறார். சென்னையில் ரோடு ஷோ நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கன்னியாகுமரி, […]
இந்திய கிரிக்கெட் வீரருக்கு அஜித் கொடுத்த ஷாக்

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரோட விடாமுயற்சி படத்தோட அப்டேட்டும், குட்பேட் அக்லி படத்தோட அப்டேட்டும் வந்துக்கிட்டே இருக்கு. ஹெல்த் இஷ்யூஸ்ல இருந்து ரெக்கவரான அஜித் அவரோட மகன் ஸ்கூல்ல ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்தது ரசிகர்கள நிம்மதியடைய செய்துச்சு. சினிமாவோட சேர்த்து குக்கிங், பைக் ரைடிங், பேமிலி பார்ட்டின்னு தன்னோட லைஃப தனக்கு பிடிச்ச மாதிரி நெகட்டிவ் கமெண்ட்ச கண்டுக்காம வாழ்ந்துக்கிட்டு இருக்காரு அஜித். மல்டிடேலண்டடான அஜித்த லைஃப்ல ஒரு முறை பாத்திடணும்னு ரசிகர்கள் மட்டும்தான் நினைக்கிறாங்கன்னா அதுதான் இல்ல. […]
எம்.எஸ்.விஸ்வநாதனை அழவைத்த ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.ய கண்ணீர்விட வெச்சதா எஸ்.பி.பி. பேசியிருக்காரு. அது என்னன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க மக்களே. 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைச்சாரு. மல்டி டேலண்டடா இருந்த எம்.எஸ்.வி. ஒரு நாள் எஸ்.பி.பி.க்கு போன் பண்ணி ஏ.ஆர்.ரகுமான பத்தி பேசி கண்ணீர்விட்டாராம். அதாவது சங்கமம் படத்துல ஆலாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க பாட்ட பாடுறதுக்காக ஏ.ஆர்.ரகுமான் என்னை கூப்டாரு. அவர் சொல்லிக் கொடுத்து நான் பாடினபோதுதான் […]
தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்- கர்நாடகா திட்டவட்டம்

தமிழகத்திற்கு கண்டிப்பாக காவேரி நீரை தரமாட்டோம் என்று கர்நாடகா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டனர். மேலும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையாவது: […]
பிரேமலதாவை மிரட்டுனாங்களாம்… பா.ஜ.க. மீது பகீர் குற்றச்சாட்டு

2024 தேர்தலில் பிரேமலதா யாருடன் கூட்டு வைப்பார் என்பது பெரிய சஸ்பென்ஸ் ஆக இருந்தது. பா.ஜ.க.வின் மோடியில் இருந்து அண்ணாமலை வரையிலும் விஜயகாந்தை பாராட்டி பேசிக்கொண்டு இருந்ததால் அங்குதான் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் ராமதாஸ் இணைந்ததால், அ.தி.மு.க.வுக்கு வந்துவிட்டார் பிரேமலதா. இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரேமலதா. அந்தவகையில் ஶ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து பேசியபோது, ‘பாஜகவுடன் கூட்டணி […]

