News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய் ஏற்கெனவே தெளிவாக அறிக்கை கொடுத்திருக்கும் நிலையில் திடீரென, ‘திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப் போட வேண்டாம்’ நடிகர் விஜய் கட்சியின் பெயரில் திடீரென ஒரு அறிக்கை இணையத்தில் வைரலாக வலம் வந்தது.

இதனை உண்மை என்று நம்பி நிறைய விஜய் ரசிகர்கள் இதை சுற்றுக்கு விடத் தொடங்கினார்கள். அதேநேரம், ஒருசிலர் மட்டும் சந்தேகத்துடன் தலைமையைத் தொடர்புகொண்டார்கள். இதையடுத்தே ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரில் போலியாக விஷமிகள் உருவாக்கிய அறிக்கை என்று தெரியவந்திருக்கிறது.

அந்த அறிக்கையில்,  ‘வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படுவர்கள் யார் என்று மனதில் வைத்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, திராவிட பிரிவினை வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பா.ஜ.க.வின் பி டீம் என்று ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இப்படி அறிக்கை விட்டால் என்னாவது என்று பதறினார்கள். அதன்பிறகு இது போலி அறிக்கை என்று தெரியவந்த பிறகே நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கையைப் பார்த்து விஜய் டென்ஷன் ஆகிவிட்டாராம். எங்கேயிருந்தது இந்த அறிக்கை வெளியானது என்பதை தேடிப் பார்த்தாரகளாம். இது, பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ ஐ.டி. விங்க் ஆட்கள் மூலம் வெளியானதாக உறுதியாகி விட்டதாம். அதனால் காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

இதையடுத்து, ‘2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விஜய் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அப்படி வரும் அறிக்கை போலியானது’ என்று த.வெ.க. சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை எப்படி ஓட்டு போட வரப்போகிறாருன்னு பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link