News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விவிபாட் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மோடி குஷியோ குஷி

பா.ஜ.க. விவிபாட் இயந்திரத்தில் மோசடி செய்தே ஜெயித்துவருகிறது என்று தொடர் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு […]

மன்சூர் அலிகானுக்கு காங்கிரஸ் கட்சியில் என்ன பதவி..?  சத்தியமூர்த்தி பவனில் கடும் குழப்பம்

நடிகர் மன்சூர் அலிகான் எங்கே இருந்தாலும் அங்கே குழப்பமும் கலாட்டாவும் நிச்சயம் இருக்கும். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் கடந்த 2021ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து தன்னுடைய கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தைக்குச் சென்றார். ஆனால், தொகுதிப் பங்கீடு உடன்பாடு அடையவில்லை என்ற கோபமானார். இந்த நிலையில் […]

இத்தனை காலமா ஏமாத்தியிருக்கானுங்க… ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா ஆரோக்கிய பானம் இல்லையாம்.

உடல் நலமில்லாத யாரையாவது பார்க்கச் சென்றால் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், உயரம் குறைவாக இருக்கும் பிள்ளைகளுக்கு போர்ன்விட்டா வாங்கிக் கொடுப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. இந்த பானங்களில் அப்படிப்பட்ட ஆரோக்கிய சத்துக்கள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபுட் பார்மர்’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் அவரது தளத்தில், ‘போர்ன்விட்டா ஒரு ஆரோக்கிய பானமே அல்ல. அதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை அருந்தும் குழந்தைகளுக்கு மிகைபருமன் முதல் டைப் 2 […]

ரத்னம் படம் கட்டப்பஞ்சாயத்துக்கு விஷால் ஆடியோ எச்சரிக்கை… ஸ்டாலினுக்கும் கலெக்டருக்கும் புகார்

 ரத்னம் படம் கட்டப்பஞ்சாயத்துக்கு விஷால் ஆடியோ எச்சரிக்கை… ஸ்டாலினுக்கும் கலெக்டருக்கும் புகார் வழக்கமாக விஷால் மீது எல்லோரும் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், ‘எப்ப போன் செஞ்சாலும் எடுக்கவே மாட்டார்’ என்பது தான். இப்போது அதே குற்றச்சாட்டை விஷால் திருச்சி தஞ்சை ஏரியா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் மீது வைத்திருக்கிறார். இதற்காக ஆடியோ வெளியிட்டு செகரட்டரி சிதம்பரம், பிரசிடென்ட் மீனாட்சி ஆகிய இருவருக்கும் கடுமையாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். விஷால் பணம் தர வேண்டியது இருக்கிறது என்று யாரோ […]

உணவுப் பொருளில் திரவ நைட்ரஜன் கலக்கப்பட்டால் அபராதம், உரிமம் ரத்து.. அதிரடி உத்தரவு

சமீபத்தில் கர்நாடகாவில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வலியால் துடித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது எனவும் அனுமதி வழங்கப்படாத உணவுப் பொருளில் கலந்து தயாரிக்கவும், சமைத்து விற்பனை செய்யவும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மூலம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு  சென்னை உணவுப் […]

பெங்களூரில் மேகதாது அணை திட்டத்துக்கு ஆதரவாக திருமாவளவன் சர்ச்சை பேச்சு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளிப்படையாக அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த நிலையில் கர்நாடக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு அணைக்கு ஆதரவாகப் போராடும் என்று திருமாவளவன் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பெங்களூரில் இந்திய கூட்டணிக்கு ஆதரவாக ரூரல் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் திருமாவளவன். அப்போது, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட பி.ஜே.பி. மோடிக்கு வாக்களிக்க […]

ராகுல் காந்தியின் அதிரடி பதிவு… 1,60,00,00,00,00,000 அதாவது 16 லட்சம் கோடி ரூபாய்

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவு பா.ஜ.க.வினரை அல்லுதெறிக்க விட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 12ஜி ஊழல் குறித்து பா.ஜ.க.வினர் எழுப்பிய 1.75 லட்சம் கோடி ரூபாயை நினைவு படுத்துவது போன்று 16 லட்சம் கோடி ரூபாய் பதிவு போட்டிருக்கிறார். அதாவது, நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளார். 1,60,00,00,00,00,000 அதாவது 16 லட்சம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பணம் இருந்தால் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் […]

பிரதமர் மன்னிப்பு கேட்டே ஆகணும்… பொங்கியெழுந்த சீமான்

தேர்தல் பிரசாரத்தில் மோடியின் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கு பல பக்கங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தேர்தல் கமிஷன் இதுகுறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் சீமான் பிரதர் மோடி மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ராஜஸ்தான் பரப்புரையின்போது இஸ்லாமிய மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலான பிரதமர் மோடியின் பேச்சு […]

எம்.ஜி.ஆர். மாளிகையை கைப்பற்ற ஜெயலலிதா இல்லம்… சசிகலா புதிய திட்டத்துக்கு மோடி ஆதரவு..?

கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சசிகலா வெளிப்படையாக பங்கெடுக்காமல் இருந்ததற்கு பிரதமர் மோடியின் அறிவுறுத்தலே காரணம் என்று கூறப்படும் நிலையில், அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா மேற்கொண்டுள்ள புதிய திட்டத்திற்கு பா.ஜ.க.வின் ஆதரவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் வாக்களித்த பின் பேட்டியளித்த சசிகலா, ’வாக்கு எண்ணிக்கைக்கு பின் தவறு செய்தவர் திருந்துவார்’ என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக குறிப்பிட்டார். அதாவது தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும் பழனிசாமி மீது அ.தி.மு.க.வினர் கோபம் அடைவார்கள் […]

சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து… டென்ஷனில் ஆம் ஆத்மி

தினமும் மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த விஷயத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று ஆம் ஆத்மி வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருக்கிறது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டைப்-2 சர்க்கரை நோயாளியான அவர், தனது குடும்ப மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என டெல்லி […]