Share via:
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட்
பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு
பதிலாக, இனி ஒரு எஸ்.ஐ. தலைமையில் தமிழக போலீசார் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு அளிக்க
உள்ளனர். அரசு செலவினங்கள் அதிகம் என்பதாலே இந்த நடவடிக்கைய விஜய் எடுத்திருப்பதாக
கூறப்படுகிறது .
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’இசட் வகை பாதுகாப்பு என்பது
ஒருவர் என்ன பதவியில் இருக்கார்னு பார்த்து முடிவு செய்வது அல்ல. அவரது முக்கியத்துவம்,
அவருக்குள்ள அச்சுறுத்தல்கள் இதெல்லாம் வெச்சு தான் தீர்மானிப்பார்கள். பாஜக தலைவர்
அண்ணாமலை அவர்கள் எந்த தேர்தலிலும் ஜெயித்தது இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பெரிய
கட்சியும் அல்ல. ஆனாலும் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இருந்தது, பிறகு அவரே அந்த
பாதுகாப்பு வேண்டாம் என சொல்லிட்டார்.
தவெக ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும் முன்பு முதல்வர் விஜய்க்கு
இசட் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அரசியல் தவிர.. முக்கிய மத தலைவர்களுக்கு கூட இசட்
பாதுகாப்பு உள்ளது தமிழ்நாட்டில் சில ஆதீனங்கள், பீடாதிபதிகள் அவ்வளவு ஏன் யோகா நிலையம்
நடத்துவோருக்கும் பாதுகாப்பு உண்டு இதெல்லாம் ஏற்கனவே சொன்னது மாதிரி அவர்களுக்கு உள்ள
அச்சுறுத்தல் அடிப்படையில் கொடுப்பார்கள்.
திமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. அதன் தலைவருக்கு உள்ள அச்சுறுத்தல்கள்
எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் அவருக்கான பாதுகாப்பை விலக்கி இருப்பது சிறுபிள்ளை தனமானது…’’
என்று கொதிக்கிறார்கள்.
இதற்கு தவெகவினர், ‘’இசட் பிரிவு பாதுகாப்பை விலக்குவது என்கிற
முடிவை முதல் அமைச்சர், டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தான் எடுக்க
முடியும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் மாதா மாதம் மக்களால் நிராகரிக்கப்பட்டு படுதோல்வி அடைந்த
எக்ஸ் எம்.எல்.ஏ. மு க ஸ்டாலினுக்கு இசட் பிரிவு கட்டணமாக 50 லட்சம் வரை மக்கள் வரிப்பணம்
வீணடிக்கப்பட்டிருப்பது சாமானிய மக்களிடையே மிகுந்த வேதனையை தருகிறது. அதனாலே இந்த
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவரை ஸ்டாலினுக்கு தினமும் 58 காவலர்கள் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 33 காவலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் செலவு
20 லட்சமாக குறைந்துள்ளது மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவருக்கு எதற்கு
மக்கள் வரிப்பணத்தில் இசட் பிளஸ் இசட் பிரிவு பாதுகாப்பு..?”’ என்கிறார்கள்.
சரியான கேள்வி.

