நேருவை காப்பாற்றுவாரா ஸ்டாலின்..? தேர்தலுக்கு ஜெயில்

அமைச்சர் நேரு பணி நியமன ஆணைகளில் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம் சாட்டி தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்டாலின், அதிமுக வழக்குப் பதிவு செய்ததும் அலறிப்போய் உத்தரவு கொடுத்திருக்கிறார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களுக்காக அமைச்சர் கே.என். நேரு தனது உறவினர்கள் மூலம் 1,020 கோடி ரூபாய் வரை லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் வாங்கியிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. […]
தேர்தலுக்கு ஜனநாயகன்… அமித் ஷாவுக்கு விஜய் எச்சரிக்கை…?

அரசியல் மீட்டிங்கை தடுத்து நிறுத்த முயற்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு மேடையிலே ஸ்டாலின் அங்கிள் என்று மிரட்டல் விடுத்தார் விஜய். இப்போது ஜனநாயகன் படத்தை திட்டமிட்டு தள்ளி வைத்திருக்கும் அமித்ஷாவுக்கு மேடையில் எப்படி எச்சரிக்கை செய்வாரோ என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ‘’எங்கள் அன்பிற்குரிய ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக […]
விஜய் ஜனநாயகன் சிக்கலுக்கு சதி…. பாஜக நாடகமா..?

தைப்பொங்கல் வெளியீடு என்று 9ம் தேதிக்கு ஜனநாயகன் டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையிலும் சென்சார் சர்டிஃபிகேட் கிடைக்கவில்லை. ஏ சர்டிஃபிகேட் மட்டுமே பஞ்சாயத்து என ஒரு குரூப் கூறிவரும் நிலையில், பாஜகவும் விஜய்யும் சேர்ந்தே பரபரப்பு கிளப்புவதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இது குறித்து பேசுபவர்கள், ‘’ஜனநாயகன் படத்தில் வன்முறையும் ரத்தம் சிந்தும் காட்சிகளும் ஓவரோ ஓவர் என்பதால் ஏ சர்டிஃபிகேட் கொடுக்க சென்சார் முடிவெடுத்திருக்கிறார்கள். இதை தயாரிப்பு தரப்பு ஏற்காமல் கோர்ட்டுக்கு போவோம் என்று அதிரடி காட்டியதால் […]
அன்புமணிக்கு எத்தனை சீட்..? எடப்பாடி கூட்டணியில் ராமதாஸ்..?

இன்று காலை அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைந்திருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் அன்புமணிக்கு 17 சீட் மற்றும் 1 ராஜ்யசபா சீட் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராமதாஸ்க்கு 5 சீட் கொடுக்கவும் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. கிரீன்வேஸ் சாலை எடப்பாடி பழனிசாமிஇல்லத்தில் இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஏற்கெனவே அதிமுக, பாஜக இடையிலான […]
மூன்று பக்கமும் கூட்டணி ஆசை. அலைபாயும் பிரேமலதா

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் இருந்து விரட்டப்பட்ட பிரேமலதா, இப்போது முன்கூட்டியே உஷாராகி ஒரே நேரத்தில் மூன்று பக்கமும் பேசிவருகிறார். அதாவது திமுக, அதிமுக, விஜய் கட்சியினரிடம் எத்தனை சீட் என்று கேட்பது அரசியல் வில்லங்கமாகிவருகிறது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்களிடம், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு படிவம் கொடுக்கப்பட்டு, அதில் திமுக, […]
திமுக கூட்டணி டமால்…? ஓங்கியடிக்கும் மாணிக்கம் தாகூர்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காத திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யுடன் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியில் ஒரு கும்பல் முயற்சி செய்துவருகிறது. அவர்களுக்கு வழிகாட்டும் மாணிக்கம் தாகூருக்கு திமுகவினர் அடி மேல் அடி கொடுக்க, அவரும் செமையாக பதிலடி கொடுத்துவருகிறார். லயோலா கல்லூரி வெளியிட்ட ஐபிடிஎஸ் தகவலை பரப்பும் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 3.10% வாக்குகளே உள்ளன என்று கூறுகிறார்கள். அதோடு, ஆட்சியில் பங்கு என்றாலே அது ஆர்.எஸ்.எஸ். குரல் என்றும் […]
அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றினாரா ஸ்டாலின்..? எடப்பாடி பழனிசாமி அதிரடி’

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டதாக கேக் ஊட்டி ஸ்டாலின் டீம் கொண்டாடி வருகிறது. ஆனால், இது பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை, பழைய சோறு என்று கிண்டலடித்து அதிரடி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் பேசிய இபிஎஸ், ‘’மக்கள் செல்வாக்கு இழந்து பயத்தில் அஞ்சி புதிய திட்டம் அறிவிக்கிறார். தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவோம் என்றார். ஆனால், இப்போது ஒரு புதிய திட்டம் கொண்டுவந்திருக்கிறார். அரசு ஊழியர் […]
கனிமொழிக்கு கை கொடுக்கும் அமித்ஷா… வைரலாகும் கலைஞர் பொண்ணு வீடியோ

திமுகவுக்கு முடிவுரை எழுதுவோம் என்று பொதுக்கூட்டத்தில் முழங்கிய அமித்ஷா, இன்று கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்பது பாஜக மற்றும் திமுகவினரை அலற விட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது, எப்படியாவது திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம். இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் திமுக ஆட்சி தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்திய தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தின் […]
விஜய் கட்சிக்கு காங்கிரஸ் குட்பை… ஜனநாயகன் டிரெய்லர் வில்லங்கம்

விஜய் படத்தின் ஜனநாயகன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், விஜய்யின் சுற்றுப்பயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேநேரம், விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கேட்டை இழுத்து மூடியிருக்கிறது காங்கிரஸ். இது குறித்து நேற்றைய தினம் கிரிஷ் ஜோடங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை திமுகவிடம் முன்வைக்கப்படுமா? தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் எனும் நிலைப்பாட்டில் காங்கிரஸ் உள்ளதா எனவும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு […]
பென்ஷன் திட்டத்தில் ஸ்டாலின் சீட்டிங்? தலையில் குட்டும் காங்கிரஸ்

ஜெயலலிதா நிறுத்திய பென்ஷன் திட்டத்தை ஸ்டாலின் திரும்பக் கொண்டுவந்துவிட்டார் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கேக் ஊட்டி கொண்டாடினார்கள். ஆனால், இது அப்பட்டமான சீட்டிங் வேலை என்று அன்புமணி ராமதாஸ் தொடங்கி காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பாகியுள்ளது. இதுகுறித்து பேசுபவர்கள், ‘’பழைய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஓய்வூதியத்திற்காக எவ்விதத் தொகையும் பிடிக்கப்படுவதில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% தொகை பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசம் […]

