News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பதற்கு நிறைய எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக இன்று விடுத்திருக்கும், ‘’ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?

மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

விஜய் மாஸ்க் போட்டுவந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். ஆனால், தவெக இன்று இப்படியொரு நிலை எடுத்திருக்கிறது என்றால் காரணம் நடிகை த்ரிஷா என்று காரணம் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து திமுகவினர், ‘’ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராடி பெற்ற ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் என்றால் தவெக தமிழ்நாட்டிற்கு பெரும் கேடு விழைவிக்கப்போகிறது என்று அர்த்தம். காரணம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்த பீட்டா அமைப்பில் ஒரு நடிகை இருந்தார் அவர் இன்று எவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் இதை உணரலாம்’’ என்கிறார்.

விஜய் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link