News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ். அரசு செலவைக் குறைக்கும் விஜய்..?.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு பதிலாக, இனி ஒரு எஸ்.ஐ. தலைமையில் தமிழக போலீசார் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு அளிக்க உள்ளனர். அரசு செலவினங்கள் அதிகம் என்பதாலே இந்த நடவடிக்கைய விஜய் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது . இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’இசட் வகை பாதுகாப்பு என்பது ஒருவர் என்ன பதவியில் இருக்கார்னு பார்த்து முடிவு செய்வது அல்ல. அவரது முக்கியத்துவம், […]

ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம்..? அமைச்சர் அறிவிப்புக்கு வரவேற்பு

நீண்ட காலமாக ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் போராடி வருகிறது. விஜய் ஆட்சியில் அதற்கு தீர்வு தென்படுகிறது. விரைவில் ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கெளசல்யா சங்கர், ‘’ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்படும் என தோழர் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் தவெக அரசின் சார்பாக அறிவித்திருக்கிறார் . இவ்வறிவிப்பை வரவேற்கிறேன். எனது மகிழ்ச்சியை எல்லோரிடமும் […]

திமுகவில் திகுதிகு மாற்றங்கள். எத்தனை மா.செ.வுக்கு ஆபத்து?

திமுகவில் இப்போது 77 மாவட்டக் கழகங்கள் உள்ளன. இதை 110 மாவட்டக் கழகங்களாக மாற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று உடன்பிறப்புகள் குஷியாகியுள்ளனர். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? காலத்தின் […]

பரந்தூருக்கு அடுத்து ஸ்போர்ட்ஸ் சிட்டி அவுட். இதுதான் மாற்றமா..?

பரந்தூர் விமான நிலையம் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது போன்று, செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான திமுக கொண்டுவந்த குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது தவெக அரசு. 261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு மையம், சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர் விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து திமுக அரசு திட்டமிட்டு வேலை தொடங்கியிருந்தது. ஜேப்பியார் […]

நீதிமன்றத்தில் விஜய் புதிய மனு. இடைத்தேர்தலுக்கு ரெடி

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக ஆட்சியமைத்து 100 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதனால் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் […]

விஜயலட்சுமி திடீர் ட்விஸ்ட். த்ரிஷாவுக்காக சீமானுடன் நல்லுறவு?

இத்தனை காலமும் சீமானுக்கு எதிராக வீடியோ மேல் வீடியோ போட்டு திட்டிக்கொண்டிருந்த நடிகை விஜயலட்சுமி திடீரென ட்விஸ்ட் வீடியோ வெளியிட்டுள்ளார். ’இனி என்னோட ஆதரவு சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும்தான், த்ரிஷாவுக்காக என்னை அவமானப்படுத்துறீங்க’ என்று தவெகவினரை நோக்கி தாக்குதல் நடத்தியிருக்கிறார். நடிகை விஜயலட்சுமியின் புதிய வீடியோ பரபரப்பாகியுள்ளது.  அந்த வீடியோவில் அவர், ‘தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார்கள். உச்சநீதிமன்றம் வரை எங்கள் விஷயம் போய் முடிந்துவிட்டது. தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு […]

அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்… காங்கிரஸை அலறவிடும் சர்வே ரிப்போர்ட்

தமிழக வெற்றி கழகத்தை தேசிய வெற்றிக் கழகமாக மாற்றி, நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு விஜய் பிரதமராக மாறுவார் என்று தவெகவினர் உற்சாகக் குரல் கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள சர்வே நாடு முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா டுடே மூட் ஆஃப் த நேஷன் சர்வே படி, இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பாஜக 261, என்.டி.ஏ. 326 சீட்டுக்களும் வெல்லும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 106 சீட்டுக்கள் தான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, […]

அடுத்த பிரதமர் விஜய்..? காங்கிரஸை மிரட்டும் பாஜக

சமீபத்தில் அமித்ஷாவை விஜய் சந்தித்துப் பேசியதிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் அனலில் போட்ட புழுவாக துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய சி.எம். நாளைய பி.எம். என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி சொன்ன கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் ரியாக்‌ஷன் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தியே அடுத்த பிரதமர் என்று முதன்முதலாக பேசியவர் மு.க.ஸ்டாலின். ஆனால், திமுகவை கழற்றிவிட்டு தவெக வண்டியில் ஏறிவிட்டார் ராகுல் காந்தி. இந்த நிலையில், முதல்வர் நிலையிலிருந்து பிரதமர் விஜய் என்று அவரது அமைச்சர்களே […]

ஆண்களுக்கு இலவச பஸ்… பெண்களுக்கு 2,000 ரூபாய், இபிஎஸ் அட்டகாச தேர்தல் அறிவிப்பு

புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி இன்று முதல் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு அசத்தியிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். 1.   மகளிர் நலன் […]

அண்ணாமலைக்கு நோபல் பரிசு பார்சல்… புற்றுநோய்க்கு மருந்து காமெடி

அரைகுறை மருத்துவத்தை விட ஆபத்தான செயல் வேறு எதுவுமில்லை என்பார்கள். இதற்கு உதாரணமாக புற்றுநோய் செல்களை ஒழித்துக் கட்டுவதற்கு மருத்துவ வழிமுறை காட்டியிருக்கிறார் அண்ணாமலை. இப்படியொரு கோமாளியை அரசியலில் இறக்கியிருக்கிறார்கள், இவர் எப்படி ஐபிஎஸ் பாஸ் செய்தார் என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் மருத்துவர்கள். புதுவையில் நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கடைபிடிக்கப்பட்டது. பாஜக இளைஞர் அணி சார்பில், இளைஞர் எழுச்சி மாநாடு, சுவாமி விவேகானந்தர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு […]