News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுராந்தகத்தில் இன்று 45 கி.மீ தூரத்திற்கு விஜய் ரோடு ஷோ போகிறார். இதை கடக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 35 இடங்களில் விஜய்க்கு பாயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தவெக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுராந்தகம் இன்று மதியம் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார்.

அவரது ரோடுஷோ பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மாமண்டூர் புக்கத்துறை சந்திப்பு படாளம் சந்திப்பு ஜானகிபுரம் சந்திப்பு மேலவலம்பேட்டை சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ், மதுராந்தகம் தெற்கு பைபாஸ் அய்யனார் கோவில் சந்திப்பு, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், கிளியாநகர், செம்பூண்டி, கீழாமூர், பசுவங்கரணை, ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், பொற்பணங்கரணை, அணைக்குன்றம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர், பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்தூர், தென்பாக்கம் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், பெருவெளி, முதுகரை, வில்லவராயநல்லூர், மாம்பாக்கம், மதுராந்தகம் காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் மதுராந்தகம் தொகுதி சாலைவலத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை. இந்த சாலைவலத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாலைவலத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, சாலைவலம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…’’ என்று கூறப்பட்டுள்ளது.

இன்று மதுராந்தகம் திருவிழா கோலம்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link