News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருந்த செய்தி வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ந்தது.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அன்புமணி வரையிலும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்நிலையில், இந்திஎதிராக போராடிய தமிழகத்தில் மாநில அரசே இந்தியில் பெயர்களை எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்நாடு அரசின் இருமொழி கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை என்றும் விஜய் எச்சரிக்கை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில், ‘’தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் – நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டதும் திருத்தப்படுவதுதான், மிகப்பெரும் மாற்றம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link