Share via:
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று உருவக்கேலி
செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தவெகவினரும் பொதுமக்களும்
ஸ்டாலினுக்கு எதிராக தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
தாராபுரம் இடைத்தேர்தலில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட நிலையில்,
‘’ இங்கே நிற்பவர் பெட்டி பாமா, பல்டி பாமா. இந்த உடலை வைத்துக் கொண்டு எப்படித்தான்
பல்டி அடித்தாரோ?’’ என பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதுதொடர்பான வீடியோ
சமூக வலைத்தளங்களில் வைரலானது. மிகப்பெரிய ஒரு கட்சியின் தலைவர், முன்னாள் முதலமைச்சர்
இப்படி உருவக்கேலி செய்யலாமா என கடும் கண்டனம் எழுந்தது.
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில்
கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெக அமைச்சர்கள்,
பிற கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சர் அருண்ராஜ், “திமுக தலைவர் ஸ்டாலின் தாராபுரம் தவெக வேட்பாளர்
சத்தியபாமா பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார்.
இதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில்
இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து
பேசிக் கொண்டிருக்கும் நிலையில்… அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை
இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார். அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி
மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்“ என கடுமையாக சாடியுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட கண்டன பதிவில், “தேர்தல் பிரச்சாரமா?பெண்களை
கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா? பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ அது திமுகவின் கேடுகெட்ட
டிஎன்ஏ. நிலை மாறினால் குணம் மாறுவான் . பொய் நீதியும் நேர்மையும் பேசுவான். தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான். பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டதிமுக தலைவரே..
மன்னிப்பு கேள்“ என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன், “சத்தியபாமாவை ஸ்டாலின் கேலிச்சித்திரம்
வரைந்த செயல் தவறானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தேர்தல் பிரச்சாரமா?
அல்லது பெண்களைக் கேலி செய்வதன் மூலமான பிரச்சாரமா? உங்கள் அரசியலில் இப்படித்தான்
பெண்களைக் கேலிச்சித்திரம் வரைவீர்களா? மக்களின் வாக்குகளை நாடும் அரசியல் கட்சிகளுக்கு
எந்தப் பொறுப்பும் இல்லையா?“ என கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இப்படி ஆளாளுக்கு ஸ்டாலினை அடித்துவருவதால், அந்த பதிவை தன்னுடைய
சோஷியல் மீடியாவில் இருந்து நீக்கியிருக்கிறார்.
இப்படி பண்றீங்களே ஸ்டாலின்.

