Share via:
தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது,
அவருக்கு மிகப்பெரும் சிக்கலாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
பிரசாரத்துக்கு வந்த குழந்தையைத் தூக்கி பிரச்சார வாகனத்தில் வைத்து
ஓட்டு கேட்டது மட்டுமல்லாமல், முதல்வர் விஜயை இழிவுபடுத்தும் வார்த்தையும் குழந்தைக்கு
சொல்லி கொடுத்து குழந்தையைபேச வைத்திருக்கிறார் உதயநிதி. அந்த சிறுவன், ‘ஓம் காளி, ஜெய் காளி, விஜய் ஒரு ஓடுகாலி’
என்று பேசியதை அடுத்து விவகாரம் வில்லங்கமாகியிருக்கிறது.
தேர்தல் பரப்புரைக்கு சிறுவனை பயன்படுத்தியதற்கும் முதலமைச்சரை
அவமதிக்கும் வகையில் சிறுவனை பேச வைத்ததாகவும் உதயநிதி மீது தாராபுரம் காவல்நிலையத்தில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரத்தில் உதயநிதி, ‘’”‘5 நிமிஷம் பேசினாலே கொளத்தூர்ல
கொத்து பரோட்டா போட்டேன், அடுத்த முறை சேப்பாக்கம் தொகுதில முட்டை பரோட்டா போட்டுருவேன்’னு
முதல்வர் பேசுறாரு. இவரு சீஃப் மினிஸ்டரா இல்லை பரோட்டா மாஸ்டரான்னே தெரியல. இந்த முதலமைச்சர்
பிரச்சாரத்துக்குக்கூட வீட்டை விட்டு வெளிய வராதவர். ஆனா, நேத்து 8 மணி நேரம் தெரு
தெருவா பிரச்சாரம் போறார்.” என்று கிண்டல் செய்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
ஜெயிலுக்குப் போக ஆசைப்படுகிறார் உதயநிதி.

