News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கடந்த பொதுத்தேர்தலில் தவெக வாங்கிய வாக்குகளை விட, இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தவெக வெற்றிபெறுவது உறுதியாகியிருப்பதால், தவெக ஆட்சிக்கு மக்கள் பாஸ் மார்க் போட்டிருப்பது உறுதியாகிவிட்டது.

கடந்த தேர்தலில் தாராபுரத்தில் டிவிகே வாங்கிய வாக்குகள் 46,438. தற்போது மொத்தமுள்ள 23 சுற்றுக்களில் 16வது சுற்றிலேயே 48,675 வாக்குகளை பெற்றுவிட்டார்கள். இனி போகப்போக இந்த வாக்குகள் கடந்த தேர்தலை விட அதிகரிக்க தான் செய்யும்.

ஆனால் 64,373 வாக்குகள் வாங்கி இருந்த திமுக 30,039 வாக்குகள் வாங்கி இருக்கிறது. 81,100 வாக்குகள் வாங்கிய அதிமுக 31,067 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அதேபோன்று கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் 62,090 வாக்குகள் வாங்கியிருந்தார். இப்போது 10வது சுற்று முடிவில் 38,128 வாக்குகள் வாங்கியிருக்கிறது. இதுவும் கடைசி சுற்றுக்குள் கடந்த முறை வாங்கியதைத் தாண்டியே இருக்கும்.

ஆனால், கடந்த தேர்தலில் அதிமுகவின் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளும் திமுகவின் அமுலு 58,838 வாக்குகளும் வாங்கியிருந்தனர். பத்தாம் சுற்று முடிவில் அதிமுக 21537 வாக்குகளும், திமுக 25,354 வாக்குகளும் மட்டுமே பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டும் கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளை வாங்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.

அதனால் அதிமுக தூர்ந்துபோன சக்தி என்பதும் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்பதும் மீண்டும் உறுதியாகியிருக்கிறது. அண்ணன் ஆல் பாஸ்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link