Share via:
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில்
மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள்
மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகள் நிறைவில் தவெக வெற்றி பெற்றுள்ளது.
தவெக – சத்யபாமா: 66,841
திமுக – சுகன்யா: 57,370
அதிமுக – பானுமதி: 45,280
நாதக – கார்த்திகா – 5268
இந்திய கம்யூனிஸ்ட் – ப.லட்சுமணன்
– 1157 வாக்குகள் பெற்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில்
தாராபுரத்தில் தவெக 46,438 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இப்போது 66,841 வாக்குகள்
பெற்றுள்ளது.
அதேபோன்று மதுராந்தகத்திலும் தவெகவின் மரகதம் குமரவேல் வெற்றி
பெற்றுள்ளார். இந்த தேர்தலில் தவெக கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தவெக – 67,819
திமுக – 48,516
அதிமுக – 43,233
நாதக – 1772
சிபிஎம் – 1,370
கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் 62,090
வாக்குகள் வாங்கியிருந்த நிலையில், இப்போது அதை விட அதிகம் வாக்குகள் பெற்றுள்ளார்
மரகதம் குமரவேல்.
இந்த தேர்தலின் மூலம் கடந்த தேர்தலில் இங்கு முதலிடம் பிடித்த
அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே, அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ.க்கள்
மீண்டும் வரிசையாக வந்து ஐக்கியமாவார்கள் என்று நம்பலாம்.

