News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

மிதக்கும் சென்னை ரூ.4 ஆயிரம் கோடி என்னாச்சு?

சென்னையில பெய்துக்கிட்டு இருக்கிற கனமழை ஒரு பக்கம் இருக்க, நிறைய இடங்கள்ல தேங்கி நிக்கிற மழைநீரையும், அதில மூழ்கிப் போயிருக்கிற புறநகர் வீட்டுமனைகளையும் குறிவெச்சு இப்ப மீம்ஸ் கிரியேட்டர்கள் வைரலாகிட்டு இருக்காங்க. இவங்களுக்கு அப்படியே கண்டெண்ட்ட வாரி கொடுத்துட்டு இருக்கு இந்த மழை.சென்னை நெடுஞ்சாலைகள்லயும், சாலைகள்லயும் மழை நீர் வெள்ளமா பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. அதிலயும் சில பகுதிகள்ல முட்டிக்கு மேல தண்ணீர் ஆறா ஓடுது. கார், பஸ், பைக்குன்னு வண்டியில போகாம ஒரு போட் கொண்டு […]

நான் ரெடி போகலாமா?

தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திரமோடி பயணம் மேற்கொண்டதோடு, சுயசார்பில் உலகில் வேறு யாருக்கும் நாம் குறைந்தவர்கள் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.   இதைத்தொடர்ந்து நாசா நிர்வாக அதிகாரி பில்நெல்சன் இந்தியாவிற்கு வந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்து செல்ல, இந்திய விண்வெளி வீரர் ஒருவருக்கு அடுத்த ஆண்டு இறுதியில் நாசா பயிற்சி அளிக்கும். அந்த வீரர் பிரதமர் மோடியாக இருப்பாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.   அதற்கு நாசாவின் தலைவர் நெல்சன் கூறும்போது, விண்வெளிக்கு […]

ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ?

ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ?   இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றம் செய்வது குறித்த விவாதங்கள் ஜி20 மாநாட்டின் போது பூகம்பமாக வெடித்த நிலையில் அது தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.   உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி,  ஆஸ்திரேலிய அணியிடம் மோதி தோல்வியை சந்தித்தது. வீரர்களின் ஓய்வறைக்கு சென்ற பிரதமர் மோடி அவர்களை கட்டியணைத்தும், கைகளை குலுக்கியும் ஆறுதல் சொன்னது இணையத்தில் வைரலானது. இதை டேக் செய்யும் நெட்டீசன்கள், ‘‘ஒரு வேளை இந்தியாவின் பெயரை ‘பாரத்’ […]

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மறுபடியும் அதே 10 மசோதாக்களை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களுக்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று தமிழக அரசு நம்பிக்கையுடன் உள்ளது.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்!

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்!   திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதி அனுபவ அங்காடி கட்டிடம்! அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடி கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் […]

பொறுப்பை உணர்ந்து அடங்கி இருங்கள்! ஆளுநருக்கு முதல்வர் எச்சரிக்கை!

இன்றைய சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவிதான். இருந்தாலும் இருக்கும வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு அடங்கி செயல்பட வேண்டும் என்றும் தனது பொறுப்பை உணர்ந்து அடங்கி இருப்பதே நலம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று  (நவ.18) சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, […]

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தலைமை செயலாளர் உத்தரவு!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.   அதன்படி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக மேகநாத ரெட்டி கூடுதல் பொறுப்பு வகித்திருந்த நிலையில் தற்போது பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐ.எ.ஏஸ்.சை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை […]

சென்னையில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது! முழு விவரம் உள்ளே!

சென்னையில் கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை (நேற்று) மொத்தம் 588 பேர் திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பல்வேறு குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு […]

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையும் விஜயசாந்தி! பா.ஜ.க. மீது அதிருப்தி!

தேர்தலில் சீட் கொடுக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி நாளை காங்கிரசில் இணைய உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தெலுங்கானாவில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி அதனுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கிடையில் பா.ஜ.க. தனது 100 வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்ததால் அங்கு தேர்தல் களம் மற்றும் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.   […]