News

Follow Us

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியை திராவிட மாடல் அரசு வழங்கிவருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமையாக சொல்லிக்கொண்டாலும், பல்வேறு இடங்களில் நீண்ட நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

மேல்மா சிப்காட் விவகாரம், பரந்தூர் விமான நிலையப் போராட்டம், எட்டுவழிச் சாலைப் போராட்டம், வேங்கைவயல் போராட்டம் போன்றவை எந்த முடிவும் எட்டப்படாமல் தொடர்ந்து நடக்கின்றன.

இந்த நிலையில், மேல்மா சிப்காட்டை கைவிடக் கோரும் மேல்மா கிராம மக்களின் 300 வது நாள் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அறப்போர் ஜெயராம, ‘மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டேன். எப்படி கொடுமையாக நள்ளிரவில் 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள் 7 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டது என்பதை பெண்கள் விவரித்தனர்! விவசாயிகளின் மன உறுதி பாராட்ட வேண்டிய ஒன்று

ஏப்ரல் மே மாதங்களில் கூட நெல் நடவு செய்யும் முப்போகம் விளையும் நிலங்கள் என்பதை கண்கூடாக இன்று பார்க்க முடிந்தது. ஏப்ரல் இறுதியில் கூட கிணற்றில் தண்ணீர் கிட்டத்தட்ட 40 அடியில் இருப்பது தெரிகிறது. விளை நிலங்களை கையகப்படுத்த தரிசு என்று அரசு ஆடும் நாடகங்கள் வெட்ட வெளிச்சம்

தன் வயலில் நடவு செய்யும் விவசாயி துரைராஜ் 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவசாயிகளின் நிலங்களை பிடுங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்து ரத்தத்தை உறிய ஏன் நினைக்கிறது தமிழக அரசு என்பதே விவசாயிகளின் கேள்வியாக உள்ளது” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திராவிட அரசுக்கு மக்களின் போராட்டக் குரல் கேட்கிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link